பேச்சு:கருநாடக வாத்தியக் கலைஞர்களின் பட்டியல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
தலைப்பை கருநாடக வாத்தியக் கலைஞர்களின் பட்டியல் அல்லது கருநாடக இசைக்கருவியாளர்களின் பட்டியல் என மாற்றலாம். புகழ்பெற்ற என்ற அடைமொழி தேவையற்றது. புகழ்பெற்ற என்பதை வரையறுக்கவும் முடியாது.--Kanags \உரையாடுக 09:59, 29 சூன் 2012 (UTC)
- நன்றி கனக்ஸ். அதுதான் சரி.மாற்றிவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 00:06, 30 சூன் 2012 (UTC)
- தந்திக்கருவிகள் என்பதைவிட நரம்புக்கருவிகள் என்பது பொருத்தமானது. நார் போன்ற நரம்பு என்னும் வழக்கு தொன்மையானதும் ஆகும்.தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக்கருவிகள் என்ற மூவகைப்பட்ட இசைக் கருவிகளைப் பற்றி மரபாகப் பேசுவர். தாளக்கருவிகளில் தாளம், கடம், மோர்சிங், இவற்றுள் அடங்காதன எனக் கூறபப்டலாம் (கடம் , பெரும் துளை (வாய்) உள்ள மட்பாண்டக் கருவி என்றும் கொள்ளலாம்; இதே போல கொம்பு, சங்கு முதலியனவும் துளைக் கருவிகளாகக் கொள்ளலாம்.) --செல்வா (பேச்சு) 00:52, 3 சூலை 2012 (UTC)
- நல்லதொரு தகவல் செல்வா. மற்றியுள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:19, 4 சூலை 2012 (UTC)