பேச்சு:கறையான்
- இக்கட்டுரை ஓரிரு வாரங்களில் முழுமைப் பெறும்.---த* உழவன் 09:20, 5 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..
பாராட்டுகள்
தொகுத* உழவன், உங்கள் உழைப்பு, ஆர்வ வீச்சை இங்கு விக்கிப்பீடியாவில் காண மிக மகிழ்கிறேன். அருமையாக வளர்த்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். துவக்கியதற்கு நன்றி.--செல்வா 14:07, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆய்த எழுத்துடன் வரும் சகரம்
தொகுதென் ஆஃசுதிரேலியா என்று எழுதியிருப்பதை ஆசுத்திரேலியா என்றே எழுதலாம். காசு, பேசு, வீசு, கொசு என்றெல்லா வருவது போல வல்லினம் மிகாமலும், மெல்லின ஒற்று முன் வராமலும் இருக்கும் இடங்களில் சகரம் காற்றொலி சகரமாக இயல்பாய் தமிழில் வழங்குகின்றது. ஆகவே ஆஃசு- என்று ஆய்த எழுத்து வேண்டாம். ஆனால் linux, oxford முதலான இடங்களில், வல்லெழுத்துடன் வரும் காற்றொலி சகரத்தைத் தமிழில் லினக்ஃசு, ஆக்ஃசுபோர்டு என்று குறிக்கலாம். திருவள்ளுவரின் திருக்குறலில்:
- தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
- வேண்டாது சாலப் படும்.
என்பதில் வரும் கஃசா என்பதை kuxsaa அல்லது kahssaa என்று ஒலித்தல் வேண்டும். ஆகவே -xsaa அல்லது -hsaa என வரும் இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம். தமிழ்வழி புள்ளி வைத்த வல்லின மெய்யெழுத்துக்குப் பின் இப்படி ஆய்தம் வருவது கிடையாது, ஆனால் இது வேற்று மொழிச் சொற்களுக்கான விதிவிலக்காகக் கொள்ளலாம். இப்பக்கத்தில் இது பற்றி எழுதியுள்ளேன்.--செல்வா 14:25, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
புதைப்படிவக்காலம் பற்றிய வினா
தொகுகரையான்-கறையான்
தொகுகரையான், கறையான் எது சரி?--சிவக்குமார் \பேச்சு 15:47, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
- கரையான்.
- கறையான் - விக்சனரி -- த* உழவன் 01:43, 24 ஆகஸ்ட் 2009 (UTC){தொடர்புக்கு..}
- விளக்கத்திற்கு நன்றி தகவலுழவரே :) --சிவக்குமார் \பேச்சு 07:46, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- சிவா! என்னை உழவரே என்றழைக்காமல், உழவனே என்றழைத்தால், உங்களிடமிருந்து நான் அந்நியப்படாமல் இருப்பேன் அல்லவா?:)த* உழவன்
@தகவலுழவன்: தோழமைக்கு வணக்கம், தாங்களின் கறையான் கட்டுரையில், கரையான்-கறையான் "ரை" - "றை" எனும் எழுத்து ஐயத்தில் அகப்பட்டுள்ளதை அறிந்து, மேற்கோள்களை சரிபார்த்தோடு என்னால் இயன்றவரை வலைகளிலும், நூல்களிலும் ஆராய்ந்ததில் கரையான் என்ற சொல்லே பெருமளவில் கையாளப்பட்டுள்ளதை அறிய நேர்ந்தது, தாங்கள் மேலுமொருமுறை சரிப்பார்ப்பது நன்று. நன்றிகள்!-- அன்புமுனுசாமி பேச்சு 12:43 25]4 பிப்ரவரி 2016 (UTC)