பேச்சு:காகம் (பேரினம்)
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
சட்டவிரோதம், சமூக விரோதம் - மாற்றுத் தமிழ்ச்சொற்கள்?? (சமூகப் பகை? சமூக எதிர்ப்பு? சட்டத்துக்குப் புறம்பான?)--Ravidreams 18:58, 13 நவம்பர் 2006 (UTC)
- நான் இதனை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். சட்ட விரோதம் என்பது சட்டத்துக்கு எதிரானது, சட்டத்தை மீறுவதாவது என்று பொருள். எனவே சட்ட மீறல்/மீறுகை. சட்ட எதிரியம் என்றும் கூறலாம். சமூக விரோதமானது, சமூகத்துக்கு (சமூக நலனுக்கு) எதிரானது. சமூக எதிரி --> சமூக எதிரியம். சட்டப் பகையானது, சட்டத்துக்கு புறம்பானது என்பது இடுவே. சட்டப்புறம்பு என்றும் சொல்லலாம். செ.ப.அ.வில்: புறம்பு என்பதைப் பார்க்கவும். சமூக விரோதி என்பதை சமூகப் பகைவர் எனலாம். சமூக விரோதம் என்பதை சமூக முரண் எனலாம் (முரண் = எதிர்; முரண்தல் = பகைத்தல்)--செல்வா 20:53, 16 டிசம்பர் 2008 (UTC)
ஆதாரம்
தொகு"காகங்களை பழக்கி இலகுவாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றை செல்லவிலங்குகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்." இத்தொடருக்கு ஆதாரம் தருவது அவசியமென நினைக்கிறேன். --மது 18:00, 25 மார்ச் 2007 (UTC)
- ஆதாரம் தேவை என்ற குறிப்பைச் சேர்த்துள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 20:16, 16 டிசம்பர் 2008 (UTC)