பேச்சு:காமராசர்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது.. |
1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம் என்பது 1966-இல் இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுள் பேணப்பட்டுள்ளபடி பசுக் கொலையைத் தடுக்க வேண்டி இந்து சமய அமைப்புகள் முன்னின்று நடத்திய போராட்டம் ஆகும். சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலர் இதன் பொருட்டு உண்ணா விரதம் மேற்கொண்டனர். இப்போராட்டம் இந்துக்கள் கோபாஷ்டமி என்று கருதும் (இந்து பஞ்சாங்கப்படி) நாளான நவம்பர் 7, 1966 அன்று இந்திய நாடாளுமன்றம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டமாக மாறியது.
அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தி பசு வதைத் தடுப்புக்கான கோரிக்கையை ஏற்கவில்லை. ஒரு இந்து புனிதனின் தலைமையில் சுமார் பத்தாயிரம் வழக்குரைஞர்கள் அடங்கிய கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முனைந்தது; பின்னர் அது தடுக்கப்பட்டது. அக்கூட்டம் புது தில்லி எங்கும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாற்பத்தெட்டு மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்துக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன [1]. கலகக் கும்பல் ஒன்று அன்றைய காங்கிரஸ் தலைவரான காமராஜரின் புது தில்லி இல்லத்தைத் தாக்கி தீ வைத்தனர்.https://ta.wikipedia.org/wiki/1966_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இதனால் நேர்ந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குப் பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் திரு. குல்சாரிலால் நந்தா பதவி விலகினார்.
காமராஜர் 9 ஆண்டுகளா அல்லது 13 ஆண்டுகளா தமிழ்நாடின் முதலமைச்சராகக் கடமையாற்றினார்.? இன்று தமிழ்நாட்டு அநாமதேயப் பயனர் ஒருவர் ஆட்சிக்காலத்தில் மாற்றங்கள் செய்துள்ளார். தெரிந்தவர்கள் தயவுசெய்து சரிபார்க்கவும். --Umapathy 15:38, 15 ஏப்ரல் 2007 (UTC).
மூத்த தலைவர்கள் பணி விடுப்பு பெறும் திட்டத்தின் படி 1963ல் அவர் பதவி விலகினார் என்று ஆங்கில விக்கி தகவல் சொல்கிறது. 9 ஆண்டுகள் சரிதான் என நினைக்கிறேன். --ரவி 15:47, 15 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி ரவி :) --Umapathy 16:10, 15 ஏப்ரல் 2007 (UTC)
கட்டுரைப் பக்கத்தில் இருந்து நகர்த்தியவை
தொகுஅகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.
காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.
தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்
கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.
தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.
உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை. பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்
சிமெண்ட் தொழிற்சாலைகள்.
மேட்டூர் காகித தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை
சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.
சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.
மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.
அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.
தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.
18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.
471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.
தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.
6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.
தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்
இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது.
கட்டுரையை மேம்படுத்த வேண்டுகோள்
தொகுஅன்றாடம் மிகுதியானோர் பார்க்கும் இக்கட்டுரையை இன்னும் சிறப்பாக கலைக்களஞ்சிய நடையில், தகுந்த ஆதாரங்களை முன்வைத்து தகவல் செறிவுடன் எழுத வேண்டும். --இரவி (பேச்சு) 10:51, 27 பெப்ரவரி 2015 (UTC)