பேச்சு:கார்ட்டோசாட்-2பி

Inbamkumar, வணக்கம். கலைச்சொற்களில் சிலவற்றிற்குப் பரிந்துரைகளை வைக்கின்றேன். அவற்றில் சில முன்பே விக்சனரியில் தமிழிணையப் பல்கலையின் அகரமுதலியிலிருந்து பெறப்பட்டவை. மேலும் சில உள்ளிணைப்புகளைக் கொடுத்துள்ளேன். முக்கியமான தகவல் பக்கமான இப்பக்கத்தை மேலும் சிறப்பாக்குங்கள். மேலும் நீங்கள் புதுக் கலைச்சொற்களை உருவாக்கும் பட்சத்தில் கலைச்சொற்களைப் பரிந்துரைத்து விட்டுப் பின்னர் பதிவேற்றுவது நல்லது. ஏனெனில், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள் இருக்கலாம் அல்லது அதையொட்டி புது கலைச்சொல் உருவாக்க முடியலாம்; என்னவெனினும், கலைச்சொற்கள் பட்டியல் ஒன்றைத் தகவல் பக்கத்திலேயே தனி தலைப்பில் இடுதல் நல்ல வழக்கம். உங்கள் பார்வைக்கு:

  • geosynchronous orbit - புவியிணக்கப் பாதை; sunsynchronous orbit - கதிரவயிணக்கப் பாதை;
  • earth observation satellite - புவிநோக்குச் செயற்கைக்கோள் ;
  • resolution (power) - பிரிதிறன்; high-resolution - உயர் பிரிதிறன்;
  • solid state recorder - திண்மநிலைப் பதிவி;

நன்றி. --பரிதிமதி 18:32, 30 ஜூலை 2010 (UTC)

கார்ட்டோசாட் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 00:02, 31 ஜூலை 2010 (UTC)
ஆமாம், சிறீதரன் சொன்னவாறு கார்ட்டோசாட் என்றிருக்க வேண்டும். புவியிணக்கப் பாதை நல்ல சொல். புவியொத்துப் பாதை அல்லது புவியொற்றுப் பாதை என்றும் கூறலாம். அதே போல கதிரவனொத்துப் பாதை. (கதிரவயிணக்கப் பாதை சரியென்றாலும் ஒலிப்பது சற்றுக் கடினமாக இருப்பதுபோல் தெரிகின்றது. இவ்வாறான இடங்களில் பிற சொற்களைப் பயன்படுத்தலாம். எப்படி Solar, Helios என்னும் இருசொற்களைப் பயன்படுத்துகிறார்களோ அதுபோல் ஒள்ளோனொத்துப் பாதை வெய்யோனொத்துப் பாதை எனலாம்:) ஆனால் சிறீதரன் அதெல்லாம் இலக்கிய வழக்கு என்பார் :) சும்ம ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.)--செல்வா 00:35, 31 ஜூலை 2010 (UTC)

இசுடுட்சாட் பத்தி தொகு

Inbamkumar86, இசுடுட்சாட் பீக்கோக்கோளைப் பற்றிய தகவல் பக்கம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு உள்ளது; மேலும், கார்ட்டோசாட்-2பியில் அதைப் பற்றி இட வேண்டாமே என்று இசுடுட்சாட் பற்றிய பத்தியை வெட்டியுள்ளேன். தவறாகவே கருத வேண்டாம். நன்றி. --பரிதிமதி 18:37, 31 ஜூலை 2010 (UTC)

இதில் தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது. இங்குள்ள அனைத்து கட்டுரைகளும் பொதுவானது தானே. --இராஜ்குமார் 03:55, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கார்ட்டோசாட்-2பி&oldid=568446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கார்ட்டோசாட்-2பி" page.