பேச்சு:கிட் (மென்பொருள்)

யாருப்ப இதுக்கு ஜிட்ன்னு பேர் வச்சது? GIT ஜிட்டுன்னா அப்ப JITய என்னன்னுயா சொல்லுவீங்க? --NaanCoder (பேச்சு) 16:01, 5 மார்ச் 2012 (UTC) அதே மாதிரி இந்த Version Controlஅ திருத்த கட்டுபாடுன்னு தமிழில் மொழி பெயர்த்த அதிபுத்திசாலி யாருப்பா? version என்றால் பதிப்பு எனதான் இத்தனை நாள் நினைத்திருந்தேன். யாரோ நம்மிடம் சொல்லாமல் மாற்றி விட்டார்கள் போலும். --NaanCoder (பேச்சு) 16:06, 5 மார்ச் 2012 (UTC)

அருண், ஒலிபெயர்ப்புகள், கலைச்சொல்லாக்கங்கள், பயன்பாடுகளில் முரண் இருப்பது வழமையே. தகுந்த இடத்தில் சுட்டிக் காட்டி நீங்களே நேரடியாக தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஒவ்வொரு கட்டுரையிலும் அதனை எழுதியவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. தங்கள் உரையாடற் பாங்கு கொஞ்சமும் நாகரிகமாக இல்லை. இது தொடர்ந்தால் விக்கிப்பீடியா:நற்பழக்கவழக்கங்களை வலியுறுத்தி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 16:18, 5 மார்ச் 2012 (UTC)
மாற்றம் செய்யலாம் என சொன்னமைக்கு நன்றி. உரையாடல் பாங்கு நாகரிகமாக இல்லை என நீங்கள் வருந்துவது புரிகிறது. மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். அதுக்காக நீங்க அப்பிடியே எம்மேல வாவடிக்கை எடுக்கறேன் அது இதுன்னு எதையாவது பண்ணி வெக்காதிங்க. இன்னொரு user account உருவாக்குவதோ அல்லது anonymousஆக உள்ளே நுழைவதோ பெரிய விசையமில்லை. கருத்தை மட்டும் கவனித்து அதைப்பத்தி மட்டும் உரையாடினால் நல்லது. நாட்டில் பல நாகரிக கோமாளிகள் உள்ளனர். --NaanCoder (பேச்சு) 03:05, 9 மார்ச் 2012 (UTC)
அருண், தலைப்பை கிட் (மென்பொருள்) என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:22, 5 மார்ச் 2012 (UTC)
தொகுக்கும் பகுதியில் தலைப்பை மாற்றும் இடம் எங்குள்ளது எனத் தெரியவில்லை. சற்று உதவினால் நல்லது. --NaanCoder (பேச்சு) 03:05, 9 மார்ச் 2012 (UTC)
மேலே வலப்புறம் "நகர்த்தவும்" என்று ஒரு தத்தல் (tab) இருக்கும். சிறீதரன் கனகு கூறியவறு மாற்றியுள்ளேன். இதன் ஒலிப்பு (/ɡɪt/) என்பதாகும். --செல்வா (பேச்சு) 03:15, 9 மார்ச் 2012 (UTC)
நன்றி செல்வா! "நகர்த்தவும்" என்பது கீழ் அம்புக்குறிக்கு அடியில் இருந்திருக்கிறது, சட்டென கண்ணில் படவில்லை. --NaanCoder (பேச்சு) 04:54, 9 மார்ச் 2012 (UTC)

Start a discussion about கிட் (மென்பொருள்)

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிட்_(மென்பொருள்)&oldid=1058786" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிட் (மென்பொருள்)" page.