பேச்சு:கிரிசு

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கிரிசு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

==Untitled==

க்ரிஷ் என்பதே அதிகாரப்பூர்வ பெயர். தமிழில் மொழி மாற்றத்தின் போது க்ரிஷ் என்றே வெளி வந்தது. వినోద్  வினோத்13:00, 25 மார்ச் 2008 (UTC)

நன்றி. தமிழை எப்படிப் பலரும் பலவிதமாகக் குதறுகிறார்கள் என்று நன்கு அறிவேன்! நல்ல (?!) எடுத்துக்காட்டுகளில் ஒன்று "க்ரியா" தற்கால அகராதி. மொழியை, மொழி முறைமைகளைக் காக்கவேண்டியவர்களே இப்படிப் பெயர் சூட்டியுள்ளார்கள். திரைப்படத்தினரைச் சொல்வானேன்! இப்படி முறைகெடுத்து வரும் இடங்களில் "க்ரிஷ்" போன்ற சொற்களை மேற்கோள் குறியாவது காட்டி இட வேண்டும் என்று நினைப்பேன்- நிப்பானியர்கள் வேற்றுமொழி ஒலிப்புகளைக் குறிக்க கட்டகானா எழுத்து முறையில் 'கைரைகோ (Gairaigo (外来語) ஐ காட்டுவது போல. மொழி தொடர்பான இன்னொரு செய்தி. பெயர்களைப் பல தமிழர்கள் "M.G. ராமச்சந்திரன்" என்பது போல முதல் சுருக்கெழுத்துக்களை ஆங்கிலத்திலும், பின்னர் பெயரைத் தமிழிலும் எழுதுகின்றனர். இப்படித் திருமண அழைப்பிதழ்களிலும் கானலாம். நான் 10 வயது சிறுவனாக இருந்த பொழுது, இதன் பொருந்தாமையைக் கூறி அலுத்தவன் என் பெயரை "செ. ரா. Selvakumar" என்று சில காலம் கையெழுத்து இட்டு வந்தேன், அப்போது பலரும் திடுக்கிட்டு எதிர்த்தார்கள், சிரித்தார்கள். அப்படிச் சொல்லித்தான் அக்காலத்தில் என் நண்பர்களுக்கும், என்னைச் சூழ்ந்து இருந்தவர்களுக்கும் "M.G. ராமச்சந்திரன்" போன்ற எழுத்துமுறையின் கொடுமையை உணர்த்த முடிந்தது. இங்கு தன்முகமான என் கூற்றுகள் சில இருப்பினும், அதன்வழி பொதுவாக எழுத்து முறைமையும் அது பற்றிய உண்மை மற்றும் கருத்தையும் தெரிவிக்கவே இங்கு இடுகின்றேன். தன்முகக் கூற்றுகளுக்கு மன்னிக்கவும்.--செல்வா 14:54, 25 மார்ச் 2008 (UTC)

தன்முக = personal ? நல்ல சொல்லாக இருக்கிறது--ரவி 15:30, 25 மார்ச் 2008 (UTC)

எனது பெயரை நான் ச.வினோத் ராஜன் என்றே இதுவரை எழுதி வருகிறேன் :-)) వినోద్  வினோத் 15:40, 25 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரிசு&oldid=1806883" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிரிசு" page.