பேச்சு:கிறித்து கற்பித்த செபம்

டெரென்ஸ், நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொளாதீர்கள். ஆங்கிலத்திலே உள்ள சொற்கள் அழகுடன் உள்ளது போல தமிழில் இல்லாதது போல தோன்றுகிறது. தேம்பவானி போன்ற இனிமையான கிறிஸ்தவ பாடல்கள் இருக்கும் பொழுது, இச் செபத்தை யாரும் வேறு எந்த வழிகளிலும் மொழிபெயர்க்க வில்லையா? இது யாருடைய மொழி பெயர்ப்பு? இதோ நானொரு மொழிபெயர்ர்பு முயன்றுள்ளேன் (இதுவும் எனக்கு ஒரு சிறிதும் நிறைவளிக்கவில்லை, எனினும் இடுகிறேன்).

விண்ணிருக்கும் எம் ஐயனே!
 ஒளிரட்டும் நின் திருப்பெயரே!
வருகவே உம் ஆட்சியே!
 விண்ணைப்போல மண்ணிலே!
அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
 மன்னிப்பீரே எம் குற்றம்தனை!
யாமும் பிறரை மன்னித்தவாறே!
 தூண்டற்கவே எம்மை தீவழியிலே!
கடையேற்றுகவே எம்மை 
தீயனிடமிருந்து நீர்.

இது செல்வா தானா! நான் இங்கு சேர்த்தவை பழைத்மிழ் விவிலியத்திலுள்ள் வசனங்களகும். உங்களது மொழிபெயர்ப்பு உக்ந்த்தாகவும் நன்றாகவும் இருக்கிறது. இதனை இங்கு பயன்படுத்தலாம்.

  • "ஐயனே" எனபது அப்பா என பொருள்படுமா? எனேனில் இச் செபத்தின் மையகருத்தே கடவுளை அப்பா என அழைப்பதுதான். "தந்தாய்" "பிதாவே" போன்ற எதயாகிலிலும் பயன்படுத்தினால் மிகவுகந்ததாக இருக்கும்
  • மேலும் புதிய தமிழ் விவிலியத்திலுள்ள வரிகளையும் இங்கே சேர்க்கலாம். புதிய விவிலியத்தின் வரிகளுக்காக காத்திருக்கிறென்

--டெரன்ஸ் 02:19, 30 ஜூன் 2006 (UTC)


ஐயா எனில் தந்தைதான். அப்பா, அத்தா, தந்தை, அச்சன், தகப்பன், ஆஞா, நாயனார் ஆயான், என பல சொற்கள் உண்டு. திருச்சி, சேலம் மாவட்டங்களில் கவுண்டர் என்னும் குடியினர் ஆஞா என சொல்லக் கேட்டிருக்கேன், வட ஆற்காடில் பலரும் நாயனார் என சொல்லிக் கேட்டிருக்கேன், திருச்சி சேலம் மாவட்டங்களில்பலர் ஐயா என சொல்லிக் கேட்டிருக்கேன். செட்டியார்கள் மற்றும் பலர் அப்பச்சி என்பர். உங்க்ளுக்கு என் மொழி பெயர்ர்பு பித்திருந்தது பற்றி நன்றி. நீங்கள் முதல் வரியில் எந் தந்தையே என்றும் மாற்றிக் கொள்ளலாம்--C.R.Selvakumar 02:45, 30 ஜூன் 2006 (UTC)செல்வா

தமிழில் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது பரலோகத்திலிருகிற எங்கள் பிதாவே உம்முடைய அரசு வருக உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும் எங்களை சோதனையில் விழ விடாதேயும். தீமையிலிருந்து எங்களை காத்தருளும் ஆமேன் :வின்சு 13:58, 5 மார்ச் 2011 (UTC)

Start a discussion about கிறித்து கற்பித்த செபம்

Start a discussion
Return to "கிறித்து கற்பித்த செபம்" page.