பேச்சு:கிழமை

வாரம் என்ற அழகான கட்டுரை உள்ளது. வழிமாற்றஞ் செய்யவும்.--Kanags 00:26, 16 ஜூலை 2006 (UTC)

நான் எழுதிய கட்டுரையை நீக்கிவிட்டு, வாரம் என்னும் கட்டுரையை கிழமை என்று வழிமாற்றம் செய்யட்டுமா? கட்டுரையின் உள்ளே கிழமை என்பது வாரம் என்றும் வழங்கப்படுகின்றது என்னும் குறிப்பை சேர்க்கலாமா? --C.R.Selvakumar 00:59, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, உங்கள் கிழமை கட்டுரையின் மேலதிக தகவல்களை வாரம் கட்டுரையில் சேர்த்துவிட்டு, வழிமாற்றஞ் செய்யலாம். ஆனால் எப்படிச் சரியாகச் செய்வது குறித்து எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை.--Kanags 01:55, 16 ஜூலை 2006 (UTC)

என் கேள்வி என்னவென்றால் கட்டுரைத்தலைப்பு வாரம் என்று இருக்கவேண்டுமா அல்லது கிழமை என்று இருக்கவேண்டுமா? --C.R.Selvakumar 02:03, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

மன்னிக்கவேண்டும். இரண்டும் இருக்கட்டுமே, என்னுடைய பரிந்துரை:

  1. கிழமையிலுள்ள சில மேலதிக தகவலை வாரத்துள் சேர்த்தல்.
  2. வாரம் கட்டுரையின் உள்ளே ஆரம்பத்தில் கிழமை என்பது வாரம் என்றும் வழங்கப்படுகின்றது என்னும் குறிப்பைச் சேர்த்தல்
  3. தலைப்பை கிழமையாக்கல். அல்லது வழிமாற்றஞ் செய்தல்.

--Kanags 02:57, 16 ஜூலை 2006 (UTC)

கிழமை, வழக்கில் உள்ள நல்ல தமிழ்ச்சொல். கட்டுரை உள்ளடக்கங்கள் இந்த தலைப்பிலேயே இருக்கட்டும். வாரம் கட்டுரையில் உள்ள கூடுதல் தகவல்களை இங்கு சேர்த்துவிட்டு, அத்தலைப்பை இங்கு வழிமாற்றிவிடுகிறேன்--ரவி 11:40, 16 ஜூலை 2006 (UTC)

கட்டுரையில் உள்ள பின்வரும் சொற்றொடர்களை விக்சனரியில் சொல் விளக்கம், தொடர்புடைய சொற்கள் தரப் பயன்படுத்தலாம். கலைக்களஞ்சியக் கட்டுரையில் அவசியமில்லை எனத் தோன்றுகிறது.

கிழமை என்றால் உரிமை என்று பொருள். ஞாயிறு என்பது சூரியன், கதிரவன், பகலவன், பொழுது, சுடரவன், வெயிலோன் என்று பல பெயர்களால் வழங்கும் ஒரு நாள்மீன். திங்கள் என்பது நிலா, அம்புலி, மதி என்று பல பெயர்களால் குறிக்கப்படும் நம் நில உலகின் ஒரே துணைக்கோள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்கள்.--ரவி 11:47, 16 ஜூலை 2006 (UTC)

கனகு, ரவி, நன்றி. கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒரு வரி தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அது முற்றிலும் உண்மை இல்லை.
அதாவது "மேற்படி வார நாட்களின் பெயர்கள் பரவலாகப் புழங்கிவரும் தற்காலத்திலும் சமயம் சார்பான அல்லது மரபுவழித் தேவைகளுக்கு இந்திய முறைகளில் மேற்படி பெயர்கள் பயன்படுத்தப்படுவது இல்லை." என்னும் வரி சரியா? திருமணம் போன்ற நிகழ்வுகள், கோயிற்சடங்குகள் எல்லாமே தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட கிழமைகளைத்தான் மிகப்பெரும்பாலும் பயன் படுத்துகின்றனர். சோதிடர்கள் வியாழனை குரு என்றும், செவ்வாயை அங்காரகன் என்றும் பல இடங்களில் கூறினாலும், கூடவே மேற்குறிப்பிட்ட கிழமைப் பெயர்களையும் கூடவே குறிப்பிடுவது வழக்கம். ஒவ்வொரு கோளுக்கும் பல பெயர்கள் உண்டு, அவற்றுள் மிகப்பெரும்பாலானவை நல்ல தமிழ்ச் சொற்கள்தாம்.--C.R.Selvakumar 14:07, 16 ஜூலை 2006 (UTC)செல்வா
செல்வா, நீங்கள் சொலவது சரியே. அந்த வரிகளில் தெளிவு இல்லை. எழுதியவர்கள் விளக்கம் தரவில்லையென்றால் எடுத்து விடலாம்.--Kanags 21:48, 16 ஜூலை 2006 (UTC)

கனகு, கருத்துக்களுக்கு நன்றி. அவ்வரியை சற்று மாற்றி எழுதியுள்ளேன். மயூரநாதன் இம்மாற்றங்களை ஏற்பார் என்று எண்ணுகிறேன்.--C.R.Selvakumar 22:31, 16 ஜூலை 2006 (UTC)செல்வா

கோள்மீன்

தொகு

கோள்மீன் என்பதும் கோள் என்பதும் ஒன்றுதானா? --Sivakumar \பேச்சு 16:24, 5 ஜூலை 2007 (UTC)

ஆமாம். மீன் என்பது ஒளிரும் கோளம் என்பதைக் குறிக்கும். ஆனால் கோள் தன்னாற்றலால் ஒளிவிடுவதில்லை. கதிரவனின் ஒளியை எதிரொளியாய் தருவதே. ஒளியை எதிர்வித்தாலும், இரவில் அது ஒளிப்புள்ளியாகத்தானே வானில் தெரிகின்றது. பொதுவாக நாள்மீன் - கோள்மீன் என இருவகையாகப் பேசுவது வழக்கம். நாள்மீன் தானே ஒளிர்வது, கோள்மீன் பிற நாள்மீனின் எதிரொளியால் ஒளிர்வது--செல்வா 16:32, 5 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிழமை&oldid=2938180" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிழமை" page.