பேச்சு:கோல்டன் குளோப் விருது

தலைப்பைத் தமிழ்ப் படுத்தலாமா?--Kanags \பேச்சு 01:25, 14 ஜனவரி 2009 (UTC)

கட்டுரையின் இடப்பக்கம் உள்ள பிற மொழி விக்கி தொடுப்புகளைப் பார்த்தால், எசுப்பானியம் போன்ற பல மொழிகளில் விருதின் பெயர் மொழிபெயர்க்கப்பட்டுளதைக் காணலாம். இது போன்ற உலக நடைமுறை உள்ள எந்த கட்டுரைக்கும் தமிழாக்கலாம் என்பதே என் பரிந்துரை. தங்க உலக விருது என்பது பொருத்தமாக இருக்குமா?--ரவி 01:34, 14 ஜனவரி 2009 (UTC)
நன்றி ரவி, Golden Globe என்பதற்கு தங்கப் பூகோள விருது எனச் சொல்லலாமா? பூமி, உலகம் என்பன தமிழ்ச்சொற்கள் இல்லை. பூகோளம் என்ற பொருளுடன் வேறு நல்ல தமிழ் சொல் இருந்தால் தெரிவியுங்கள்.--Kanags \பேச்சு 03:18, 14 ஜனவரி 2009 (UTC)
உலகம் தூய தமிழ்ச்சொல். 300 சொற்களுக்கும் மேலாக உல்-உலகம் பற்றி தேவநேயப்பாவாணர் ஐயம் திரிபற விளக்கி உள்ளார்.சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலைப் பார்க்கவும். தேவநேயப்பாவாணரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை ஆகையால், விக்கி நூல்களில் தட்டச்சு செய்து தொகுத்தி வைத்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். பொன் நிலவுருண்டைப் பரிசு அல்லது பொற்கோளப் பரிசு எனலாம். கோல்டன் குளோபுப் பரிசு என்றே இருக்கலாமே!--செல்வா 03:45, 14 ஜனவரி
2009 (UTC)

பொற்கோள விருது பொருத்தமாக இருக்கிறது--ரவி 18:16, 14 ஜனவரி 2009 (UTC)

நில உலகுக்கான சொற்கள்

தொகு

பேச்சு:ஆக்ஸிஜன்#நில உலகுக்கான சொற்கள் என்னும் பகுதியில் இருந்து:

தமிழில் வழங்கும் சொற்கள் பல. அவற்றுள் சில வேற்றுமொழியில் இருந்து வருபவை. உல் > உலகம் என்பது போல் உகம் என்றாலும் உலகம்தான். குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம் (இரு = பெரிய, பெருமை உடைய - இரண்டு என்பதல்ல இங்கு பொருள்), வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, தரை, காசினி, புவி, புவனம், பூவுலகு, பூமி, நிலம், உலகம். ஆக மொத்தம் 29க்கும் குறையாமல் உள்ளன--செல்வா 17:59, 7 மார்ச் 2007 (UTC)--செல்வா 18:13, 7 மார்ச் 2007 (UTC)--செல்வா 03:45, 14 ஜனவரி 2009 (UTC)

மேலும் சில சொற்கள்:அகம், அகலிடம், அகலுள், அளக்கர், அசலை (அசையாதது), ஆர், இடை, இளை, கிடக்கை, தகர் (மேடு புடைத்திருப்பது என்னும் பொருள்), தாங்கல், திணி, திணை, திரை, நடு, நிலை, பவனம், பாரி, பாரிடம், புரை, பூதியம், பூழில், வயம், கடலகம். (24 சொற்கள்)--செல்வா 04:31, 14 ஜனவரி 2009 (UTC)
Loka Samastha Sukhino Bhavantu என்ற மந்திரத்தில் வரும் லோகா என்ற சொல் உலகைத் தானே குறிக்கும். லோகா என்ற வடமொழிச் சொல் லோகம், உலகம் ஆனதாகத் தான் நான் நினைத்திருந்தேன். தவறானால் மன்னிக்கவும்.--04:01, 14 ஜனவரி 2009 (UTC)
ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் சமற்கிருதத்தில் ஏற்கப்பட்டுள்ளன. தமிழில் இருந்து சமற்கிருதத்திற்குச் சென்ற சொற்களில் நீர், மீன், தாமரை முதலான சொற்கள் பரவலாக அறிந்தவை. லோ"கா என்னும் சொல் தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்ற சொல். கனகு, "ஓ அப்படியா" என்றால் போதுமே, மன்னிப்பெல்லாம் எதற்கு? நாம் கருத்து பரிமாற்றம்தானே செய்கிறோம்? --செல்வா 04:31, 14 ஜனவரி 2009 (UTC)
Return to "கோல்டன் குளோப் விருது" page.