பேச்சு:கோவியர்

யாழ்ப்பாண சாதீயத்தில் கோவியர் . கோவியர் என்னும் சாதி , யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதிகளில் வெள்ளாருக்கு இணையானது.

யாழ்ப்பானத்தில் கோவியர் என்கின்ற சாதீயம் பற்றி குறிப்பிடும்போது , மறைந்த இலங்கையின் எதிர்கட்சித்தலைவர் சட்டத்தரணி அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் , கொவிகம என்கின்ற சிங்கள வெள்ளார்களே என குறிப்பிடுவர் . பாரளுமன்றில் பேசிய அவரது உரை , இன்றும் பாரளுமன்ற பதிவேட்டில் உண்டு . யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதியினராக வெள்ளாரும் கோவியருமே இருந்தார்கள் என்பதற்க்கு யாழ்ப்பாண வைபவமாலை சான்றாதரம் சொல்கிறது . யாழ்ப்பாணத்தில் இரண்டு மரமெறிகள் இருந்தார்கள் . பள்ளர் , நளவர் என இரு பகுதியினர் . பள்ளர் வெள்ளாளருக்குரிய மரமேறிகளாகவும் , நளவர் கோவியருக்குரிய மரமேறிகளாகவும் , விவசாய உதவியாளர்களாகவும் இருந்தார்கள் . கோவியர் பொதுவாகவே சண்டித்தனத்தில் திறமையானவர்கள். சிங்கள வெள்ளார்களின் உணவுப் பழக்க வழக்கத்தினை ஒத்தவர்கள் இவர்கள் . இவர்கள் பௌத்தம் தழுவிய தமிழர்களாக வாழ்ந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது . கந்தரோடை , சுண்ணாகம் , மாதகல் , தெல்லிப்பளை , உடுவில் , நவாலி , புன்னாலைக்கட்டுவன் , அச்சுவேலி , கரணவாய் , கரவெட்டி, மாலுசந்தி , துன்னாலை , வல்லிபுரப்பரியார் ஒழுங்கை , மந்திகை , வரணி , மந்துவில் , புத்தூர் , கொடிகாம் , மீசாலை , சாவகச்சேலி, மறவன்புலவு , தனங்கிளப்பு , எழுதுமட்டுவாள் , கைதடி , இலுபாலை , கோப்பாய் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறார்கள். இலங்கையில் பேராசிரியர்களாக , பல்கலைக்கழக துணைவேந்தர்களாக , சிறந்த கல்விமான்களாக , இலங்கை நிர்வாகசேவை உயர் அலுவலர்களாக பணியாற்றுகிறார்கள் . சண்டித்தனத்திலும் பெயர் போனவர்கள் இவர்கள் ! கொடிகாம்ம் ஐயன் , அச்சுவேலி தவராசா , மீசாலை சரக்கர் , சங்கானை மணியம் , போக்கன் கதிர்காமர் , கார்க்கார சின்னையர் , மாதகல் பொன்னையர் , எழுதுமட்டுவாழ் கைலாயர் என பலர் அந்த நாட்களில் ஊர் சண்டித்தன கார்ர் . இவர்கள் பெரும்பாலும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிகளின் இரண்டாம் நிலைத்தலைவர்களாகவும் இருந்தவர்கள் . தீவகத்தில் இச்சாதியினர் வடுகர் என அழைக்கப்பட்டு இன்று தீவக வெள்ளாராக மாறிவிட்டார்கள் . ஆதிக்க சாதியினராகிய கோவியர் , வெள்ளாளருக்கு சமானமான நிலச்சுவாந்தர்களாகவும் இருந்துள்ளார்கள் . வெள்ளார் , கோவியர் இரு சாதியினரும் பெரும்பாலும் சமானமான உறவுகளொடு இருப்பவர்கள் . ஒற்றுமையான சாதியினர் . கோவில் விடயங்களில் ஆழ்ந்த அறிவும் அனுபவும் கொண்டவர்கள் கோவிய சாதீயினர் . இவர்களுக்கும் வெள்ளாளருக்கும் மட்டுமே மரணவீட்டில் பறைமோளம் , நிலவாடை விரித்தல் , ஆலவட்டம் பிடித்தல் போன்ற கௌரவ அந்தஸ்துக்கள் இருந்தன . ஏனைய சாதியினருக்கு இத்தகைய கௌரவங்கள் இல்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது . திருமணவிடயத்தில் இவர்கள் வேறு சாதீயினரோடு கலப்புத்திருமணங்களை ஏற்பதில்லை . ஆனாலும் இன்று வெள்ளாளரோடு கலந்தாகிவிட்டது என்பதும் நோக்கத்தக்கது .

இலங்கையில் கோவியர் தொகு

சாதிய அமைப்பு இளம்பருதி (பேச்சு) 08:04, 21 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோவியர்&oldid=3698670" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோவியர்" page.