பேச்சு:சன் டைரக்ட்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy in topic Untitled
Untitled
தொகுஇக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாரமுள்ள தகவல்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி போதுமான அளவு நிறை குறைகளுடன் நடுநிலையை கருத்தில் கொண்டே எழுதப்பட்டுள்ளது. அதன்காரணமாக இக்கட்டுரையில் இருந்த {{advert}} வார்ப்புரு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:32, 11 சூன் 2012 (UTC)
- விலை விபரங்கள், மற்றும் இணைக்கப்பட்டுள்ள அலைவரிசைகள் போன்ற விபரங்கள் தேவை தானா? அவற்றை அவர்களின் தளத்திற்கே சென்று அறிந்து கொள்ளத்தக்கதாக வெளி இணைப்பை மட்டும் கொடுத்தால் போதாதா?--Kanags \உரையாடுக 12:57, 11 சூன் 2012 (UTC)
- விலை விபரங்களை குறையாகவே குறிப்பிட்டுள்ளேன். 75- உரூபாய் என்று ஆரம்பித்துவிட்டு தற்போது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதாலேயே அதனை குறித்துள்ளேன், அலைவரிசை விபரங்கள் தேவையானதாகக் கருதினேன், ஆங்கில் விக்கியில் இணைத்திருக்கிறார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:05, 11 சூன் 2012 (UTC)
- போட்டி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் பற்றிய தகவல் உடனுக்குடன் மாறுதலுக்குட்பட்டவை எனவே நடுநிலையை கருத்தில் கொண்டு பாரபட்சமின்றி சுருக்கமான, பொது தகவல் மட்டும் போதுமானது. --ஸ்ரீதர் (பேச்சு) 13:27, 11 சூன் 2012 (UTC)
- போட்டி நிறுவனமான திசுத் தொலைக்காட்சி கட்டுரையை பார்த்தேன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுடன், இதில் உள்ள குறைகளையும், குறைபாடுகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட தகவல்கள், அதிகமாக கருதப்பட்டால், அது குறித்து உரையாடிவிட்டு தேவையான மாற்றங்களைச் செய்ய உடன்படுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:05, 11 சூன் 2012 (UTC)