பேச்சு:சாத்தான்

இஸ்லாமிய பார்வையில் சைத்தான்:

தொகு

அல்லாஹ் (இறைவன்) ஆதம்(அலை) அவர்களை படைத்தான் படைத்த பிறகு சில பெயர்களை அல்லாஹ் கற்றுகொடுத்தான் பின்பு மலக்குகளிடம்(வான தூதுவர்கள்) நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாயிருப்பின் நீங்கள் இதன் பெயர்களை விவரியுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள் யா அல்லாஹ் நீயே தூய்மையானவன் நீ எங்களுக்கு கற்று கொடுத்ததை தவிர வேறு எதனையும் நாங்கள் அறியமாட்டோம் அப்பொழுது அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம் நீர் இப்பொழுது அவைகளின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பாயாக என்றான். அதற்கு ஆதம் (அலை) அனைத்தையும் அவர்கள் முன்னால் கூறினார்கள் .பிறகு அல்லாஹ் தனது மலக்குகளிடம் நீங்கள் அனைவரும் ஆதமுக்கு மண்டியிட்டு சிரம் பணியுங்கள் என்று கூறினான்.அப்பொழுது சைத்தானை தவிர அனைவரும் சிரம் பணிந்தார்கள்.அல்லாஹ் சைத்தானை கேட்டான் நீ அவர்களுடன் சேராதிருக்க உனக்கு என்ன ஆயிற்று என்று வினவினான். அதற்கு சைத்தான் தட்டினால் சத்தம் வரும் மாற்றமுள்ள களிமண்ணால் நீ உருவாக்கிய மனிதனுக்கு(ஆதம் ) நெருப்பால் படைக்கப்பட்ட உயர்த்த படைப்பான நான் ஏன் சிரம்பணிய வேணும் என்று அல்ல்ஹுவிடம் வாதிட்டான் . மேலும் இவன் ஜின் இனத்தை சார்ந்தவனாக இருக்கிறான் ,இவன் மலக்குகள் அனைவருக்கும் தலைவனாக வாழும் அளவிற்கு இருந்தான் . அல்லாஹ்வின் பேச்சை கேட்க மறுத்து அவன் ஆணவம் கொண்டான். நமது படைப்புதான் உயர்த்த படைப்பு மனிதர்கள் தாழ்ந்த படைப்பு என்று ஆனால் அல்லாஹ் ஆணவம் அடைத்த காரணத்தினால் அவர் சபிக்கப்பட்டவனாக மாறினான் .

மேலும் சைத்தான் அல்லாஹுவிடம் நீ என்னை மறுமை நாள் வரை வாழ அனுமதி தரவேண்டும் நீ யாருக்காக என்னை நீ வழிகேட்டில் ஆக்கினாயோ அந்த ஆதாமின் சந்ததியினரை நான் வழிகெடுத்து காட்டுவேன் என்று அல்லாஹு விடம் சபதம் ஏற்று வந்திருக்கிறான் , " நீ என்னை வலிகெடுத்ததின் காரணமாக ஆதமின் சந்ததியினரை உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்து வழி மறித்து அதில்) அவர்களுக்காக திண்ணமாக உட்காந்து கொள்வேன் . என்றும் அவன் கூறினான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாத்தான்&oldid=1706269" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாத்தான்" page.