பேச்சு:சிகைக்காய்ச் செடி

சிகைக்காய்ச் செடி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


  • இக்கட்டுரையை நான் எழுதக்காரணம் இதை ஆங்கிலத்தில் ஷிகாக்காய் என அழைக்கின்றனர். மேலும், இதற்கு முதன்மைக் காரணம் தமிழர்களாகிய நாம் நம் பெருமை நாமறியாமல் சிகைக்காய் (Chikaikkaai) என அழைக்க வேண்டியதை ஸியக்காய்/ஸிகாக்காய் என அழைப்பதே முதன்மைப் பெருகிறது. இது என்ன அவ்வளவுச் சிறப்பு வாய்ந்ததா என்று சிலர் விளம்பலாம். இவ்வாறு ஆயின் சிகைக்காய் என்பது இருத் தமிழ் வேர்ச்சொற்களை உள்ளடக்கிய பண்டைய தமிழ் வார்த்தை. தமிழில் காணப்படாத ஸ உச்சரிப்பிட்டு ஒலிப்பதால் பின்னொருக் காலத்தில் இது தமிழ்ச்சொல் என்பதற்குச் சான்று இல்லை என்றாகும். இக்கருத்தை எதிர்ப்பவர்கள் இந்தியா தனக்கே உரித்தானது எனக் கூறி வேம்பின் காப்புரிமையை மீட்கப்போராடியதையும் எதிர்ப்பதாகும். ஆகையால் தமிழில் காணப்படாத ஸ உச்சரிப்பைத் தவிர்த்து மொழியை உச்சரியுங்கள் என்று தாழ்மையுடன் என் அன்பு உறவுகளைக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக சிவப்பு (Chivappu); செம்மை (chemmai); சிறப்பு (ChiRappu); சிறகு (ChiRagu); சித்தம் (Chiththam) என்பனச் சில. உலகில் தமிழர்களைத் தவிர தன் மொழியைத் தானேச் சிதைத்தவர்கள் யாரும் இலர். இதில் வருந்தத்தக்கத் தகவல் நன்கு புலமைப் பெற்ற அறிஞர்கள் சிலரும் இதில் அடங்குவர். இது மொழி வெறிப்போராட்டம் அல்ல இது ஒரு உரிமைப் போராட்டம். இக் கருத்து இங்குத் தேவைப் படாதது/அல்லது எழுதக்கூடாதாக் கூட இருக்கலாம். ஆயினும் இதுவும் நம் தமிழ்க் களஞ்சியத்திற்குத் தேவையான ஒரு ஆவனமாகும்.
Return to "சிகைக்காய்ச் செடி" page.