பேச்சு:சிங்கள பௌத்தம்
இக்க கட்டுரை நடுநிலை சற்று தவறியிருக்கிறது என்றே கருதுகிறேன். Bias ஆகவும் Imbalance ஆகவும் இருக்கிறது.
- மகாவம்சம் திரிபுகள் என்று கூறுவது ஒரு தமிழர் நோக்கில். சிங்கள் மக்களின் நோக்கில் மகாவசம் ஒரு வராலாற்று ஆவணம். மகாவம்சத்தின் தத்துவத்தை கூறமுதல் திருபுகள் கூறமுயல்வது பக்க சார்பை வெளிப்படுத்துகிறது.
- சிங்கள் பெளத்த என்ற கட்டுரையில் பெயர்கள் பற்றி ஒரு பெரும் பகுதி பொருந்தவில்லை. அதற்கு வேறு கட்டுரை எழுதலாம். ஆனால் இங்கு பொருந்தவில்லை. சிங்கள் பெளத்த பெயர்கள் பற்றி ஒரு பகுதி இருந்தால் ஏற்றுக்கொள்லாம்.
- இக்கட்டுரை சமூக அறிவியல் விமர்சனக் கட்டுரை போல அமைகிறது. இப்படிக் குறைகள் கொண்ட கட்டுரைகளை நானே எழுதியிருந்தாலும், அவை குறையுடயவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
--Natkeeran 16:20, 24 ஜனவரி 2009 (UTC)
நடுநிலமை
தொகுஇலங்கையின் வரலாற்றை அறிவதற்கான ஒரு வரலாற்று ஆவணமாகவே “மகாவம்சம்” பார்க்கப்படுகின்றது. சிங்களவர்கள் மட்டும் அன்றி தமிழர்களாலும் அப்படித்தான் என்றே நினைக்கின்றேன். ஆனால் அது திரிபுகள் அற்ற நூல் என்று எப்படிக் கூறுகின்றீர்கள்? சிங்கள மக்களின் நோக்கில் மகாவம்சம் ஒரு வரலாற்று ஆவணம் என்பதால் மட்டும் நாம் அதனை அப்படியே உள்வாங்கிக்கொள்வதுதான் சரி என்கின்றீர்களா?
தவிர “திரிபுகள்” என்று கூறுவதற்கான விளக்கம், இன்றைய அறிவியலுக்கு பொருந்தாதக் கற்பனைவாதம் போன்றவற்றிற்கான விளக்கம் உங்களால் கோரப்பட்டிருந்தால் நலம்.
//மகாவம்சத்தின் தத்துவத்தை கூறமுதல் திருபுகள் கூறமுயல்வது//
முதலிம் மகாவம்சம் ஒரு தத்துவமல்ல.
இரண்டாவது மகாவம்சத்தின் உற்கூறுகளை நாம் இங்கே கூற முற்படவில்லை. விரிவுபடுத்தவும் இல்லை. (அவற்றை “மகாவம்சம்” பக்கத்தில் செய்யலாம்)
திரிபுகள் பற்றி கூற விளைந்துள்ளோம். காராணம் (உங்களின் கூற்றின் படி) மகாவம்சத்தை ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமே பார்க்கும் சிங்களவர்கள், இலங்கையை ஒரு பல்லின நாடாக பார்க்கத் தவறி, இது சிங்களப் பௌத்தருக்கே உரித்தான பௌத்த தேசம் என்றும், ஐயாயிரம் ஆண்டுகள் பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் மகாவம்சம் கூறுவதை திரிபுகள் என்று கூறாமல் எப்படிக் கூறுவது? அதுவும் புத்தர் இறந்து பலநூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதை?
ஒரு உன்னதமான தத்துவக் கோட்பாடுகளைக் கொண்ட பௌத்தம் மதக் கோட்பாடுகள் மகாவம்சப் புனைவுகள் சிங்களவர்கள் மத்தியில் வன்மத்தை வளர்த்துவிட்டிருக்கின்றது. அதுவே பௌத்த மத அடிப்படைக் கோட்பாடுகளின் இருந்து நடைமுறையில் “சிங்களப் பௌத்தம்” வேறுப்பட்டு நிற்கின்றது.
இக்கட்டுரையின் முக்கியப்பிரிவுகள்
- 1. பௌத்தத்தின் தோற்றம்
- 2. இலங்கையின் பௌத்தம் அறிமுகம்
- 3. இலங்கையின் பௌத்த வரலாற்றுக் கூறுகள் (மகாவம்சம் கூறுபவை)
- 4. பௌத்தத்தின் அடிப்படை அகிம்சாவாதக் கருத்துக்கள் (விளக்கப்படும்)
- 5. பௌத்த மதக் கோட்பாடுகளுக்கும் நடைமுறை சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகள். அதன் பக்க விளைவுகள்.
போன்றவைகளாகும்.
//பெயர்கள் பற்றி ஒரு பெரும் பகுதி பொருந்தவில்லை// ஆம், அவற்றை மாற்ற வேண்டும்.
அதேவேளை இக்கட்டுரை இன்னமும் முழுமைப்படுத்தாத நிலையில் அதாரங்கள் கோரப்படாமல், விளக்கங்கள் கோரப்படாமல் நடுநிலைத் தொடர்பில் கேள்வி எழுப்பியிருப்பதன் நோக்கம் புரியவில்லை.--HK Arun 21:14, 25 ஜனவரி 2009 (UTC)
கட்டுரைத் தலைப்பு
தொகுஇக்கட்டுரைக்கு இலங்கையில் பௌத்தம் என்று தலைப்பிட்டு அதன் வரலாற்றையும், அது எப்படித் தற்போது திரிவு படுத்தப்பட்டது என மேற்கோள்களுடன் (நடுநிலையாக) எழுதுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.--Kanags \பேச்சு 23:13, 25 ஜனவரி 2009 (UTC)