பேச்சு:சிப்பாய்க் கிளர்ச்சி, 1857

//அதிலிருந்து தொடங்கி 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு கட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய எதிர்ப்பு எதிரொலித்தது. பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வட இந்தியச் சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.//

மேற்கண்ட வரிகள் சிப்பாய்க் கலகத்துக்கு முன் தமிழ் நிலப்பகுதியில் மட்டுமே ஆங்கிலேய எதிர்ப்பு இருந்தது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது. ஆனால், இதற்கு அடுத்த பத்தியிலேயே 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போர்களை அடுத்து கிழக்கிந்தியக் கம்பெனி விரிவடைந்ததைத் தெரிவிக்கிறது. இந்த மயக்கம் / குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்--இரவி (பேச்சு) 15:54, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

தலைப்பு மற்றம்

தொகு

இந்தியர்களால் முதல் இந்திய சுதந்திரப்போர், 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் என்று பார்க்கப்படும் 1857 ஆண்டு நிகழ்வு ஆங்கில வரலாற்று ஆசிரியர்களால் சிப்பாய்க் கிளர்ச்சி என்று ஏளனத் தொனியில் குறிப்பிடப்படுவது வழக்கம். எனவே கட்டுரையின் முதன்மைத் தலைப்பை முதல் இந்திய சுதந்திரப்போர் அல்லது 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் என்று மாற்றலாம். --எஸ்ஸார் (பேச்சு) 12:20, 19 சூன் 2013 (UTC)Reply

நல்ல அவதானிப்பு. 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் என்று மாற்றலாம். கலகம் ஆ அல்லது கலக்கம் ஆ?--Natkeeran (பேச்சு) 13:47, 19 சூன் 2013 (UTC)Reply

இன்னும் சிப்பாய்க் கிளர்ச்சி என்று கூறுவது பொருந்தாது. பலரும் இதனை முதல் இந்திய விடுதலைப் போர் என்றே குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அதுவும் சரியானதன்று, ஏனெனில் 1857 உக்கு முன்னே தமிழ்நாட்டில் பிரித்தானியாவுக்கு எதிரே பல எதிர்ப்புபோர்கள் நிகழ்ந்துள்ளன. பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. ஆகவே இதிய விடுதலைக்கான சிப்பாய் எழுச்சி/கிளர்ச்சி என்று மாற்றலாம். 'முதல்' என்னும் சொல் பொருந்தாது.--செல்வா (பேச்சு) 14:34, 19 சூன் 2013 (UTC)Reply

Return to "சிப்பாய்க் கிளர்ச்சி, 1857" page.