பேச்சு:சீன டிராகன்

இதனை சீன ட்றாகன் என்றால் இன்னும் ஒலிப்பொருத்தமுடையதாக இருக்கும். தமிழ் நாட்டவர் டிராகன் அல்லது ட்ராகன் என்று எழுத்துப் பெயர்பார்கள். --செல்வா 01:37, 27 ஜனவரி 2007 (UTC)

தமிழில் மெய்யெழுத்தில் ஒரு சொல்லைத் தொடங்குவது தமிழ் இலக்கணத்துக்கு பொருந்தாது அல்லவா? --Natkeeran 02:11, 27 ஜனவரி 2007 (UTC)

உண்மைதான், நற்கீரன், ஆனால் அப்படிப் பார்த்தால் டகரத்திலும் தொடங்கலாகாதே. பிறமொழிச் சொற்களுக்கு விலக்கு கொடுத்துத் தான் ஆள வேண்டும். இன்றைய சூழலில் கூடிய மட்டிலும் ஒலி ஒப்புமை இருந்தால் நல்லது என்று பலரும் நினைக்கின்றனர். டிராகன் அல்லது ட்றாகன், டிறாகன் என்பதை யாளிப்பாம்பு என்றும் கூறலாம். தமிழில் யாளி என்பது ஒரு கற்பனை விலங்கு. பொதுவாக பல விலங்குகளின் உறுப்புகளும் பெற்று இருக்கும். எனவே யாளிப் பாம்பு, யாளிமுதலை, யாளிப்பல்லி, கொடுயாளி ஓந்தி என்றெல்லாம் கூறவும் இயலும். --செல்வா 04:41, 27 ஜனவரி 2007 (UTC)
சீன டிறாகன் பொருத்தமாக இருக்கும்.--Kanags 02:43, 27 ஜனவரி 2007 (UTC)
கனகு, கொடும் விலங்காக இருப்பதால் டிறாகன் என்பது இங்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம், ஆனால் பொதுவாக, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு இந்த வல்லின றகரம் இடம் பெயர்ந்து வரும்பொழுது கடுங் கொடூரமானதாகத் தென்படுகின்றது. --செல்வா 04:41, 27 ஜனவரி 2007 (UTC)
இதை டிராகன் என மாற்றாலாமா ? ற வருவது செல்வா குறிப்பிடுவது ஏதோ ஒரு வித கடுமையான உணர்வு ஏற்படுகின்றது. மேலும் ட் முதல் எழுத்தாக வரக்கூடாது அல்லவா. என்வே மிகவும் கொடூரமாக உள்ளதால் இதை டிராகன் என மாற்றலாம் என நினைக்கின்றே. ஐரோப்பிய கதைகளில் மட்டும் தான் டிராகன் கொடும் விலங்காக உள்ளது. ஜப்பானிய மற்றும் சீனாவில் இது அதிர்ஷடம் தரும் விலங்காகவும் சீன அரசரின் சின்னமாகவும் செல்வத்தை தரும் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இப்படி ஒரு நல்ல அழகான விலங்குக்கு வல்லின றகரத்தை பயன்படுத்தாகமல் இருக்கலாமே :-))(பி.கு: நான் டிராகன் வருடத்தில் பிறந்தவன் என்பதால் இந்த பச்சாதாபம்:-)))
wi
n
d
வினோத் 09:34, 30 டிசம்பர் 2007 (UTC)

Start a discussion about சீன டிராகன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீன_டிராகன்&oldid=3901716" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீன டிராகன்" page.