பேச்சு:செசில் (அரிமா)
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
- 100விக்கிநாட்கள் ( https://meta.wikimedia.org/wiki/100wikidays ) முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் தொடங்கும் கட்டுரைகளை நானே அடுத்த நாள் மேம்படுத்தி விடுகிறேன். அது வரை நேரம் தரவும் :)--இரவி (பேச்சு) 16:36, 4 ஆகத்து 2015 (UTC)
- @Ravidreams: 100 விக்கிநாள்கள் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கியதற்கு நன்றி. பெரும் என்பது உயிர்மெய் எழுத்துகளின் முன்பே பயன்படுத்தப்படுகின்றது. உயிரெழுத்துகளின் முன் பேர் என்னும் வடிவமே (ஒரு-ஓர், இரு-ஈர் போன்றவற்றை ஒத்து) பயன்படுத்தப்படுகின்றது. பேராசிரியர், பேராசை போல, பேராய்வு (பெரும் ஆய்வு என் வருமிடத்தில்) அல்லது பெரிய ஆய்வு (பெயரெச்சத்திற்கு இச்சிக்கல் இல்லை.) என வருவது சிறப்பு.--மதனாகரன் (பேச்சு) 11:33, 5 ஆகத்து 2015 (UTC)
- நன்றி, மதனாகரன். உங்கள் ஆழமான தமிழறிவு கண்டு வியக்கிறேன். larger study என்பதைப் பெரும் ஆய்வு என்பதை விட பரந்த ஆய்வு என்று குறிப்பிடுவது பொருத்தமாகத் தோன்றுகிறது. அவ்வாறே மாற்றியுள்ளேன்.--இரவி (பேச்சு) 11:45, 5 ஆகத்து 2015 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 13:37, 5 ஆகத்து 2015 (UTC)