பேச்சு:செண்டிமீட்டர்

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதன் தலைப்பு சென்ட்டி மீட்டர் அல்லது செண்டி மீட்டர் என்று தந்து உள்ளே இலங்கை வழக்காக சதம மீட்டர் என்பதைக் குறிப்பிட்டு எழுதலாமா? சென்ட்டி மீட்டர் என்பது தமிழ் நாட்டு வழக்கும் "உலக" வழக்கும் ஆகும். சதம என்பதும் தமிழ் அல்ல. மீட்டர், செண்ட்டி (செண்டி அல்லது சென்ட்டி) ஆகிய இரண்டும் வேற்று மொழி, சதம என்பது வேற்று மொழி, எனவே இதில் உலக வழக்கோடு நெருங்கி இருப்பது நல்லது.--செல்வா 16:08, 10 நவம்பர் 2007 (UTC)Reply

கனகும் மற்ற பயனர்களும் மேலே நான் கூறியுள்ளது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என் நிலைப்பாடு, அலகுகளில் நாம் அனைத்துலக முறையையே பின்பற்றுவது நல்லது. எனவே டெசி, சென்ட்டி (அல்லது செண்ட்டி), மில்லி முதலானவற்றையே பின்பற்றலாம். சதம என்னும் வழக்கம் தேவையா? குறிப்பதால் தவறில்லை. நூற்றன் அல்லது கீழ்நூற்றன் என்னும் சொல்லாட்சியையும் குறித்து வைக்கலாம். ஆனால் முன்னிலைப்படுத்த வேண்டுமா? சமீ என்றால் சதுர மீட்டரா என்னும் குழப்பம் வேறு வருகின்றது. இன்னொன்றையும் பற்றிப் பேசுதல் வேண்டும். செ.மீ என்று இடையே புள்ளி வைக்காம்ல் எழுதுதல்தான் நல்லது, ஏனெனில் பல பண்பலகுகள் வரும் பொழுது, இடையே புள்ளி வைத்துக் காட்ட வேண்டியத் தேவை இருக்கும். பண்பலகுகளின் அடுக்கத்தை வேறு காட்ட வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக கி.செமீ/நொ2 = g.cm/s2. அது மட்டுமல்ல, கிராம்.மீட்டர்/நொ2 என்று இருந்தால் இன்னும் குழப்பம் அதிகம் வர வாய்ப்புள்ளது. கி.மீ/நொ2 .
சமீ என்பது தேவை எனில் வைத்திருக்கலாம், ஆனால் கட்டுரையின் முதன்மைத் தலைப்பானது, மற்ற கீழ்வாய் அலகுகளைப்போல, அனைத்துலகச் சொல்லாகவே இருத்தல் நல்லது என்று நினைக்கிறேன். --செல்வா 22:06, 21 மே 2008 (UTC)Reply

செல்வாவின் கருத்தை வழிமொழிகிறேன். அனைவருக்கும் உடன்பாடென்றால் நடைக்கையேட்டில் குறிக்கலாம். இதுவரை அலகுககளைத் தமிழில் எழுதும்போது இடையில் புள்ளி இட்டு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இனி அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. சென்டி மீட்டர் என்றே எழுதினால் ஒலிப்பு நெருக்கமாக இருக்கும். ஆனால், தமிழில் ன்டி, ண்ட்டி என்று வராது என நினைக்கிறேன். --ரவி 22:54, 21 மே 2008 (UTC)Reply
சென்டி மீட்டர் அல்லது செண்டி மீட்டர் என்று எழுதலாம், ரவி, ஆனால் அவற்றை chenḍi miittar , cheṇḍi miittar என்றுதான் ஒலித்தல் வேண்டும். centi என்று வல்லின டகர ஒலி வருதல் கூடாது. chendi or cheNdi என்று ஒலிப்பதானால் ஒரு குழப்பமும் இல்லை. ஒலிப்பு கருதியே செண்ட்டி என்று ணகரத்தின் பின் மேலும் ஒரு டகர ஒற்று. ஒரு எழுத்து கூட இருந்தாலும், ஒலிப்பு முறையை காக்க உதவும். --செல்வா 23:20, 21 மே 2008 (UTC)Reply
தமிழகப் பாடப்புத்தகங்களில் சென்டிமீட்டர் என்றே எழுதப்படுகிறது.--கி.மூர்த்தி 15:17, 27 சூன் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செண்டிமீட்டர்&oldid=3451270" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செண்டிமீட்டர்" page.