பேச்சு:செயற்றிட்டம்
இதன் தலைப்பை செயல் திட்டம் என்று மாற்றினால் புரிந்துகொள்ள இன்னும் எளிதாக இருக்கும். --சிவகுமார் 13:29, 9 ஜூலை 2006 (UTC)
- ஆம்--ரவி 14:59, 9 ஜூலை 2006 (UTC)
செயல் திட்டம் = Action Plan ???!!!! --Natkeeran 15:08, 9 ஜூலை 2006 (UTC)
project என்பதற்கு செயற்றிட்டம் என்றமொழிபெயர்ப்பை நான் எங்கும் கண்டதில்லை. அது திட்டமிடப்பட்ட செயலைச் செய்து முடிக்கும் செயற்பாடு என்பதால் திட்டச் செயல் என்பதுதான் பொருத்தமோ தெரியவில்லை. செயல்+திட்டம் செயற்றிட்டம் தானே! ஆனால் அண்மைக்காலங்களில் பழைய புணர்ச்சி விதிகள் தவிர்க்கப்பட்டு தனி சொற்களாக எழுதும் வழக்கம் அதிகரித்து வருகிறது உண்மை. அவ்வகையில் செயல் திட்டம் என்றாலும் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆனால் project management மிகவும் பரந்த துறை. அதற்கான தமிழ் மொழிபெயர்ப்பாக செயல்+திட்டம் தான் நின்று நிலைக்கும் என்றால் செயற்றிட்டம் என்ற தலைப்பே பொருத்தமானது. பரத ஒரு துறைக்கான tecnical term நல்ல தமிழில் இருப்பதே சிறந்ததென்பது என் தாழ்மையான அபிப்பிராயம். --கோபி 15:42, 9 ஜூலை 2006 (UTC)
- project என்பதற்கு இராம.கி புறத்திட்டு என்று அழகானதொரு சொல்லைச் சில வேர்ச்சொற்கள் கொண்டு பரிந்துரைத்திருக்கிறார். நானும் வேறு சில வலைப்பதிவர்களும் அதனைப் பாவிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், புதியதாக இருக்கிறதே என்று த.வி.யில் அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. அதே போல் management= மானகை என்றும் சொல்லாக்கித் தருகிறார். --செல்வராஜ் 22:25, 9 ஜூலை 2006 (UTC)
Project
தொகுசெல்வா, இதைப் பற்றி முன்னர் உரையாடினோமோ. இல்லை என்றே நினைக்கிறேன்.
இப்போது செயற்றிட்டம் என்று ஒரு குறங்கட்டுரை இருக்கிறது. ஆனால் பொது வழக்கத்தில் திட்டம் என்ற சொல்லே இருப்பத்தாக நினைக்கிறேன். எனக்கு திட்டம் என்ற சொல் நன்றாகவே படுகிறது. en:Plan, project planning ஆகியவற்றை திட்டமிடல் எனலாம். உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல். நன்றி.
- Plan என்பதற்கும் Project என்பதற்கும் தொடர்பான வேறு சில சொற்களுடனும் வேறுபாடு காட்டுமாறு இருத்தல் வேண்டும். திட்டம் என்பது திண் = உறுதி, கெட்டி என்பதன் அடிப்படையில் உருவானது. திட்டமிட்டு செய்தல் என்பது உறுதியாக "திட்டம் தீட்டி" அதன்படி செயற்படுதல். ஒரு செயலை (பணியை) நிறைவேற்றுமுகமாக வழிமுறைகள், இடைநிலைகள் உறுதி செய்த திட்டம் செயற்திட்டம் எனலாம். பிளான் என்னும் சொல், பணியை நிறைவேற்றத் தொடங்கும் முன் திட்டம் பற்றிய வரைவு எனலாம். முன் திட்ட வரைவு அல்லது முன்திட்டம் பிளான். பிரா'சக்ட் என்பது திட்டமிட்ட ஒன்றைச் செய்வது- காலம் வரையறையுடன் மற்றும் பணிநிலைகளை முன்திட்டப்படி நடத்திச்செல்லுதல். செயற்திட்டம் என்பது actionable plan or action-plan. திட்டம் என்பது solidfied plan or project plan. என் நண்பர் இராம.கி யின் புறத்திட்டு என்பது சரியென எனக்குப் படவில்லை. புறத்திட்டு என்னும் சொல் வெளியே உள்ள திட்டான நிலப்பகுதி என்பது போல பொருள் தருகின்றது. புறத்தீடு என்றாரோ? எனக்கு விளங்கவில்லை. தேவநேயப்பாவாணர் வகுதி = design என்னும் சொல்லை ஓரிடத்தில் பரிந்துரைக்கின்றார். "வகுத்தான் வகுத்த வழியல்லாது" என்னும் திருக்குறள் சொல்லாட்சியும் பொருளை விளக்கும்.
- வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
இந்த வகுதியும், திட்டம் தீட்டல், திட்டம் வகுத்தல் என்பதற்குப் பயன்படும் சொல். திட்டவகுதி என்பது பிளான் என்பது போல, வகுத்திட்டம் என்றும் கூறலாம். --செல்வா 17:43, 19 டிசம்பர் 2008 (UTC)
- Plan என்பதற்கும் Project என்பதற்கும் தொடர்பான வேறு சில சொற்களுடனும் வேறுபாடு காட்டுமாறு இருத்தல் வேண்டும். திட்டம் என்பது திண் = உறுதி, கெட்டி என்பதன் அடிப்படையில் உருவானது. திட்டமிட்டு செய்தல் என்பது உறுதியாக "திட்டம் தீட்டி" அதன்படி செயற்படுதல். ஒரு செயலை (பணியை) நிறைவேற்றுமுகமாக வழிமுறைகள், இடைநிலைகள் உறுதி செய்த திட்டம் செயற்திட்டம் எனலாம். பிளான் என்னும் சொல், பணியை நிறைவேற்றத் தொடங்கும் முன் திட்டம் பற்றிய வரைவு எனலாம். முன் திட்ட வரைவு அல்லது முன்திட்டம் பிளான். பிரா'சக்ட் என்பது திட்டமிட்ட ஒன்றைச் செய்வது- காலம் வரையறையுடன் மற்றும் பணிநிலைகளை முன்திட்டப்படி நடத்திச்செல்லுதல். செயற்திட்டம் என்பது actionable plan or action-plan. திட்டம் என்பது solidfied plan or project plan. என் நண்பர் இராம.கி யின் புறத்திட்டு என்பது சரியென எனக்குப் படவில்லை. புறத்திட்டு என்னும் சொல் வெளியே உள்ள திட்டான நிலப்பகுதி என்பது போல பொருள் தருகின்றது. புறத்தீடு என்றாரோ? எனக்கு விளங்கவில்லை. தேவநேயப்பாவாணர் வகுதி = design என்னும் சொல்லை ஓரிடத்தில் பரிந்துரைக்கின்றார். "வகுத்தான் வகுத்த வழியல்லாது" என்னும் திருக்குறள் சொல்லாட்சியும் பொருளை விளக்கும்.
வழக்கத்தில் இருப்பவை
தொகு- திட்டம்
- வேலைத்திட்டம்
- செயற்திட்டம்
விக்சனரி
தொகு- திட்டப்பணி
- ஒரு வேலை
- வேலைத்திட்டம்
வேறு பரிந்துரைகள்
தொகு- புறத்திட்டு - இராம. கி.
- முயலல் - [1]
--Natkeeran 17:10, 19 டிசம்பர் 2008 (UTC)
- புறத்திட்டம் என்பதே பயன்படுத்த எளிதாக உள்ளது.--இராச்குமார் (பேச்சு) 09:49, 30 சூன் 2012 (UTC)