பேச்சு:செய்வினை (சடங்கு)
செய்வினை, செயப்பாட்டு வினை என்று தமிழ் இலக்கணத்தில் வரும் என நினைக்கிறேன். எனவே, இக்கட்டுரைக்கு பொருத்தமான அடைப்புக்குறி விளக்கம் ஏதும் தரலாமா? நல்ல அடைப்புக்குறி விளக்கம் ஒன்றையும் பரிந்துரையுங்கள்--ரவி 08:24, 30 செப்டெம்பர் 2006 (UTC)
- செய்வினையும் வசியமும் ஒன்றல்லவே! :) --கோபி 16:47, 30 செப்டெம்பர் 2006 (UTC)
இதனைப்பற்றிய ஆராய்வொன்று நடத்தப்படவேண்டும் மேலும் இக்கட்டுரை மிக முக்கியமானதொன்றாக நான் கருதுகின்றென் ஆனாலும் இத்னை அழிப்பதும் பாதுகாக்கப்படுவதுமான உரிமையை உங்கள் அனைவருக்கும் வழங்குகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 18:02, 30 செப்டெம்பர் 2006 (UTC)
- இது அழிக்க வேண்டியதொன்றல்ல. ஆனால் தலைப்பு மாற்ற வேண்டியதாகும். விடயமறிந்தவர்கள் பங்களிப்புடன் சுவாரசியமான கட்டுரையாக வளர்த்தெடுக்கப்படக்கூடியதொன்றாகும். --கோபி 18:47, 30 செப்டெம்பர் 2006 (UTC)
செய்வினை என்பதே இணையத்தில் வழங்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளேன் மேலும் இத்னை சூனியம் என்றும் அழைக்கின்றனர்.எந்தத் தலைப்பு நன்று தாங்களே முடிவு செய்யுங்கள்--சக்திவேல் நிரோஜன் 18:56, 30 செப்டெம்பர் 2006 (UTC)
நிரோ, நிச்சயமாக இத்தலைப்பை அழிக்கத் தேவையில்லை. சுவாரசியமான, முக்கியமான தலைப்பு ஒன்றில் கட்டுரை தொடங்கி வைத்ததற்கு மிகவும் நன்றி மற்றும் பாராட்டுக்கள். தலைப்பை எப்படி மேற்கொண்டும் தெளிவுபடுத்தலாம் என்பதே என் கேள்வி--ரவி 21:06, 30 செப்டெம்பர் 2006 (UTC)
செய்வினை எனும் இக்கட்டுரையின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் (மூடநம்பிக்கை) என்று எழுதுவது pov (நமக்கு உண்மையாகப் பட்டாலும் நாம் அப்படிக்கூறமுடியாது, வாசிப்பவர் தான் அதைத்தீர்மானிக்க வேண்டும்) எனவே தலைப்பை மாற்ற வேண்டுகிறேன்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:46, 22 சூலை 2013 (UTC)