பேச்சு:சொதி
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Vinoth raj
இலங்கை தமிழ் பிரதேசங்களில் இது ”சொதி” என்று பரவலாக அழைக்கப் பட்டாலும் சிங்கள மொழியிலும் ”ஹொதி” என்றே அழைக்கப் படுகிறது. சிலர் இதனை தமிழில் ”ஆணம்” என்று அழைப்பதனையும் காணலாம். எனவே சொதி என்பது தமிழ்ச் சொல்தானா என ஆராயவேண்டி உள்ளது. அத்துடன் சொதி தேங்காய் பாலிலேயே தயாரிக்கப் படுகிறது. அன்றி பசுப்பாலில் தயாரிக்கப் படுவதாக நான் அறியவில்லை. அறிந்தவர்கள் இருந்தால் நன்று. இல்லையாயின் தயவுசெய்து திருத்தவும். --வினோத் 05:13, 4 சனவரி 2011 (UTC)