பேச்சு:ஞாயிறு (விண்மீன்)
தலைப்பு மாற்றம்
தொகுசூரியன் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்பது நன்கு அறிந்தது. எ. கா. பரிதி மாற்கலைஞர் தனது வடமொழிப் பெயரான சூரிய நாராயண சாச்த்ரி என்றப் பெயரை மாற்றியே மேற்குறிப்பிட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டார். ஆதலால், இதன் தலைப்பை பரிதி என மாற்றம் கொடுத்து பகலவன், கதிரவன், ஞாயிறு என்ற பெயர்களுக்கு இணையாக வழிமாற்றுக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். கலந்துரையாடுக. நன்றிகளுடன். --சிங்கமுகன் 15:38, 28 ஆகத்து 2011 (UTC)
பரிதி என்பது சுற்றளவு என்றும் பொருள் படும் எனவே மீண்டும் சூரியன் என்று பெயர்மற்றவும் சூரியன் தமிழோடு இரண்டற கலந்த சொல்.--Sank (பேச்சு) 12:53, 22 மே 2012 (UTC). விருப்பம்.--Kanags \உரையாடுக 13:22, 22 மே 2012 (UTC)
- கதிரவன் என்ற பெயருக்கு மாற்றலாம் என்பதே எனது கருத்து. --மதனாகரன் (பேச்சு) 14:57, 22 மே 2012 (UTC)
சுடு -> சூடு - > சுடுவது சூரியன் என்பது போல் எங்கோ ஒரு சொல் விளக்கம் கண்ட நினைவு. கதிரவன், பரிதி போன்ற சொற்களை விட ஞாயிறு நிறைய மக்களுக்குத் தெரிந்திருக்கக்கூடிய சொல் என்று நினைக்கிறேன். சூரியன் தமிழ்ச் சொல்லா இல்லையா என்பது தனியே நிறுவ வேண்டியது. மதன், இது போன்ற முக்கிய தலைப்புகளை மாற்றும் முன், பேச்சுப் பக்கத்தில் வினவி சற்று பொறுத்திருந்து மாற்றலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:18, 22 மே 2012 (UTC)
- சிங்கமுகன் நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்திருந்தும் யாரும் கவனிக்கவில்லை. அதனாலேயே உடனே மாற்றினேன். சூரியன் தமிழ்ச் சொல் இல்லை என்பதற்குச் சிங்கமுகனே ஆதாரங்கொடுத்துள்ளார். இன்னோராதாரம் இங்கே! --மதனாகரன் (பேச்சு) 15:29, 22 மே 2012 (UTC)
- நீங்கள் குறிப்பிட்ட அகராதியில் புத்தகம் என்பது வடசொல் என்றுள்ளது ஆனால் பொத்தகம் (பொத்திய அகம் ) புத்தகமகியதாக எங்கேயோ படித்த நினைவு இவ்வாறு நல்ல தமிழ் சொற்களை வடசொல் என்று தவற விடுகிறோமோ என்பது என்கவலை--Sank (பேச்சு) 04:29, 23 மே 2012 (UTC)
Sank குறிப்பிடுவதே என்னுடைய கவலையும். பல வட மொழிச் சொற்கள் தமிழில் இருந்து சென்றவையாக இருக்கலாம். எது வட சொல் எது தமிழ்ச் சொல் என்று தேர்ந்த மொழியிலாளர்களே ஆய்ந்து நிறுவ முடியும். இதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளாக இருப்பது நலம். மேம்போக்காக சில சொற்களை ஒதுக்குவதன் தமிழ்ச் சொற்களையும் ஒதுக்கி விடும் வாய்ப்பு உண்டு. இந்தக் கட்டுரையைப் பொறுத்த வரை, சிங்கமுகன் தந்திருப்பது ஒரு வேண்டுகோள் அல்லது ஆலோசனையே. பெயரை மாற்றலாம் என்பதற்கும் என்ன பெயருக்கு மாற்றலாம் என்பதற்கும் பொதுக்கருத்து இருக்கவில்லை. இது போல் பல பக்கங்களில் வேண்டுகோள்கள் உள்ளன. எனவே, மாற்றுக் கருத்து வரக்கூடிய இடங்களில், பெயரை மாற்றும் முன் ஒரு முறை அறிவித்து விட்டுப் பொறுத்திருந்து மாற்றினால் நலம். இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை, 1) சூரியன் தமிழ்ச் சொல்லா? 2) தமிழ்ச் சொல்லுக்கு முன்னுரிமை கொடுத்து பெயரை மாற்றலாமா? 3) எந்தச் சொல்லுக்கு மாற்றலாம் என்று மூன்று கேள்விகளுக்கு விடை கண்ட பிறகே பெயரை மாற்றுவது நலம். பல கட்டுரைகளிலும் இதனைத் தனித்தனியாக அணுகுவதை விடுத்து, ஒரு கொள்கை முடிவாகவும் இதனை அணுகுவது நலம். --இரவி (பேச்சு) 05:39, 23 மே 2012 (UTC)
- புஸ்தக் என்னும் வட சொல்லே தமிழ் முறைக்கேற்பப் புத்தகம் என்றெழுதப்படுகின்றது. நூல் எனும் பொருளில் வரும்போது புத்தகம் என்பது தமிழல்ல. ஆயினும் புதிய வீடு என்பதைக் குறிக்கும்போது புத்தகம் (புதிய + அகம் = புத்தகம்) தமிழ்ச் சொல்லே. பொத்தகம் என்பது தமிழ்ச் சொல். அப்படியானால் பொத்தகம் எனுஞ்சரியான வழக்கைப் பயன்படுத்துவது தானே நன்று.
- சூரியன் என்பது வட சொல்லே. மேலும் ஆதாரங்கள் கீழே:-
ஞாயிறு நல்ல தமிழ்ச்சொல் தமிழர்கள் நன்கு அறிந்த சொல் எனவே தலைப்பை அதற்கு மாற்றுவோமா?? --Sank (பேச்சு) 11:40, 1 சூலை 2012 (UTC)
- ஞாயிறு அனைவரும் அறிந்த தமிழ்ச் சொல். அத்தலைப்புக்கே கட்டுரையை நகர்த்துவோம் Sank. --மதனாகரன் (பேச்சு) 12:09, 1 சூலை 2012 (UTC)