பேச்சு:தனித்தமிழ் இயக்கம்

தனித்தமிழ் இயக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மேகராஜன், நீங்கள் பங்களிக்கும் தனித் தமிழ் விக்கிபீடியாவுக்குப் பொருந்தாத உள்ளடக்கம் கொண்டிருக்கிறது. இது விக்சனரிக்கே உகந்தது. தனித் தமிழ் இயக்கம் தொடர்பான கட்டுரையை உங்களால் உருவாக்க முடிந்தால்பயனுள்ளதாக இருக்க்ம். நன்றி. கோபி 16:31, 29 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இப்பட்டியலில் உள்ளவற்றையும் இது போன்ற இன்ன பிற சொற்களையும் விக்சனரியில் ஏற்கனவே சேர்த்து வருகிறேன். இப்பக்கத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் சேர்த்த பிறகு தெரிவிக்கிறேன். அதன் பிறகு நீக்கலாம். --ரவி 21:07, 29 செப்டெம்பர் 2006 (UTC)Reply
கோபி, ரவி, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தற்போதைக்கு இந்த பக்கம் கட்டுரை வடிவில் இல்லாததற்கு மன்னிக்கவும். ஒரு புதிய மனிதர் தனித்தமிழ் இயக்கத்தை பற்றியும், தமிழில் உள்ள் பிற மொழி வார்த்தைகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள இதுவே உகந்த இடம் என்று எனக்கு தோன்றுகிறது .
மேகராஜன், கோபி சொன்னபடி நீங்கள் தனித்தமிழ் இயக்கம் குறித்து தனிக்கட்டுரை எழுதி அங்கு எடுத்துக்காட்டுக்கு ஓரிரு பிறமொழிக்கலப்புச் சொற்களையும் இணையான தனித்தமிழ் சொற்களையும் ஒரு சிறு பட்டியலாகத் தரலாம். எனினும், தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை எண்ணற்றவையாகும். அவையனைத்துக்கும் விக்கிபீடியாவிலேயே இணைத் தமிழ்ச்சொற்கள் தருவது இயலாது. ஏனெனில், விக்கிபீடியாவை ஒரு கலைக்களஞ்சியமாகவே வைத்திருக்க விரும்புகிறோம். இது போன்ற பணிகளை கட்டற்ற தமிழ் அகரமுதலியான தமிழ் விக்சனரியில் (http://ta.wiktionary.org) செய்யலாம். அது விக்கிபீடியா திட்டத்தின் துணைத் திட்டம் என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். நன்றி--ரவி 09:16, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

ரவி, விக்சனரியில் ஒரு தமிழ்ச்சொல் தூயதமிழ்ச்சொல்லா என்பதை அறிய வாய்ப்பு இருக்கிறதா?

ஒரு சொல் தூய தமிழ்ச்சொல்லா, இல்லையென்றால் அது என்ன மொழிச் சொல் என்று அறியத்தர விக்சனரியில் வாய்ப்புண்டு. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தரும் முன் அது என்ன மொழிச்சொல் என்று அறியத்தருகிறோம். எடுத்துக்காட்டுக்கு, art, Art ஆகிய ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிச்சொற்களை பாருங்கள். தனித்தமிழ் பக்கங்களில் இவ்வாறு தமிழ் என்று குறிப்பிடுவதில்லை. மாறாக, அதற்கு இணையான பிற மொழிச் சொற்களின் மொழிபெயர்ப்புகள் தருகிறோம். எடுத்துக்காட்டு, இரவு பக்கத்தில் மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால், இராத்திரி பக்கத்தில் மொழிபெயர்ப்புகள் இல்லை. விக்சனரியை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வேறுபாடுகளை கவனிப்பதன் மூலம் எது நல்ல தமிழ்ச்சொல் என்று விளங்கிக் கொள்ள இயலும். இது கொஞ்சம் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் இருக்கலாம். மாற்றாக, இராத்திரி போன்ற சொற்களின் பக்கங்களில் அதன் சொல் மூலம், எந்த மொழியிலிருந்து வந்தது என்பதை மொழியியல் ரீதியிலும் ஆராய்ந்து எழுதலாம். தற்போது, இது போன்று ஆராய்ந்து எழுதும் பங்களிப்பாளர்கள் இல்லாததால் இது போன்ற கூறுகளை தற்போது விக்சனரியில் காண இயலாது. ஆனால், வருங்காலத்தில் இத்தகைய குறிப்புகளை தருவதற்கான களமாக விக்சனரி விளங்கும்.--ரவி 10:04, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

ரவி , உங்கள் எடுத்துகாட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல விக்சனரியில் சுலபமாக தமிழில் உள்ள எல்லா பிற மொழிச்சொற்களையும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இந்த கட்டுரையில் இச்சொற்கள் இடம் பெறுவது முக்கியம் என்று நான் கருதுகிறேன். தயவு செய்து இக்கட்டுரையை நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளிருந்து நீக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

இக்கட்டுரையின் தலைப்பை தனித்தமிழ் இயக்கம் என்னும் பெயருக்கு மாற்றி மேலும் விருத்தி செய்யலாம். பட்டியலை வேண்டுமென்றால் table வடிவில் தரலாம்.--Kanags 12:44, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

சொல்ல மறந்துவிட்டேன். விக்சனரியில் இது போன்ற பட்டியல்களை பின்னிணைப்புகளாகவும் தரலாம். கட்டுரையில் அளவுக்கு மிகாத பட்டியலாக இச்சொற்களை தராத ஆட்சேபணையில்லை. ஆனால், இவ்வாறான எண்ணற்ற சொற்களை ஒரே கட்டுரையில் குவிப்பது பரிந்துரைத்தக்கதல்ல. இது போன்ற சொற்பட்டியல்களை தருவதை விட தனித்தமிழ் இயக்க வரலாறு குறித்து எழுதுவதே கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்--ரவி 12:50, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

மேகராஜன் கவனத்துக்கு

தொகு

மேகராஜன், தனித்தமிழ்ச் சொற்களை அடையாளம் காண உதவ வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். இத்தகைய ஆர்வம் மதிக்கப்படவேண்டியதே. ஆனால் விக்கிபீடியா ஓர் அகராதி அல்ல. ஆதலால் இப்பக்கம் நீக்கப்படவேண்டும். தயவுசெய்து இப்பக்கத்தில் இச்சொற்களைத் தொகுத்து உங்கள் பயனுள்ள நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எவரும் பக்கங்களைத் தொகுக்கலாம் என்பதற்காக கலைக்களஞ்சியத்துக்கு ஒவ்வாத உள்ளடக்கத்தை உருவாக்குவது சரியல்ல. உங்களது அனுமதியின்றி இப்பக்கத்தை நீக்கி உங்கள் மனம்நோகும் படியாக நடந்து கொள்ளக் கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

ஒரு சொற்பட்டியலை அமைப்பதற்கான இடம் விக்கிபீடியா அல்ல. தயவுசெய்து இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதை எண்ணிப்பாருங்கள். மற்றபடி உங்கள் ஆர்வத்தைத் தடுப்பதாக நினைக்காதீர்கள். தனித்தமிழ் இயக்கம் தொடர்பான விரிவான கட்டுரையை எழுதுங்கள். தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றம், அவசியம், வளர்ச்சி, தற்போதைய நிலை ஆகியவற்றை விரிவாக எழுதலாம். ஆனால் சொற்களை வேறொரு இணையத்தளத்தில் உருவாக்கிவிட்டு அதற்கு வெளியிணைப்புக் கொடுப்பதே சரியானது.

நீங்கள் பொருத்தமான விதத்தில் பங்களித்தால் இப்பக்கத்தை நீக்க வேண்டியதில்லை. இதனை தனித் தமிழ் இயக்கம் என்ற பக்கத்துக்கு நகர்த்துங்கள். உள்ளடக்கத்தை பொருத்தமான விதத்தில் மாற்றியமையுங்கள். உதாரணத்துக்குச் சிறு பட்டியலைக் கொடுப்பதில் தவறில்லை.

நீங்கள் விக்கிபீடியா நடைமுறைகளைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஆதலால் உங்களால் மிகப்பயனுள்ள விதத்தில் பங்களிக்க முடியும். தனித்தமிழில் மிகுந்த ஆர்வமுள்ளவர் நீங்களென்றால் தமிழ் தொடர்பில் பயனுள்ள பல விடயங்களை இணைக்க முடியும். உங்கள் பணி தொடர வாழ்த்துகள். கோபி 15:32, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி.

தொகு

இங்கு மறுமொழி செய்த அனைவருக்கும் நன்றி. இப்பக்கத்தை நீக்கீ விடுங்கள்.

ஐயங்கள்

தொகு

இப்பக்கத்தின் பெரும்பாலான சொற்களை தமிழ் விக்சனரியில் சேர்த்து உள்ளேன். சில ஐயங்கள். சத்ரு பகையா பகைவனா? அதிகம், சங்கடம் ஆகியவை தூய தமிழ்ச் சொற்கள் என்று தரப்பட்டுள்ளன. ஆனால், அவையும் பிற மொழி மூலச் சொற்கள் என்று நினைக்கிறேன். கஷ்டம் என்பதற்கு துன்பம் என்று சொல்லலாமா? difficult என்பதற்கு இணையான தூய தமிழ்ச் சொல் என்ன?

பிறகு, சொற்கள் தவிர ஊர்ப்பெயர்கள், கடவுள்களின் தமிழ்ப் பெயர்கள் ஆகியவற்றை விக்சனரியில் சேர்ப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. இத்தகவல்களை கட்டுரை ஆசிரியர் பொருத்தமான இணையத்தளங்களில் அல்லது வலைப்பதிவுகளில் தரலாம். அல்லது, பொருத்தமான விக்கிபீடியா கட்டுரைகளில் சிறு குறிப்புகளாகத் தரலாம்--ரவி 06:43, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

தனித்தமிழ் சொற்கள்

தொகு

வாகனங்களின் தமிழ் பெயர்கள் 2401:4900:627A:5D82:DAED:CD28:F960:2CC1 12:49, 10 பெப்ரவரி 2022 (UTC)

Return to "தனித்தமிழ் இயக்கம்" page.