பேச்சு:தமிழ் முஸ்லிம்கள்

இக்கட்டுரையில் பிற பகுதிகள் பற்றித் தெரியாது ஆனால் இலக்கியத்தில் குறிப்பிடும் திருவாசகப் பாடல், தேவாரம்,திருவாய் மொழி, கந்தர் அலங்காரம் முதலியவை தவறாக பொருள் கொள்ளப் பட்டுள்ளது. திருத்துவதற்குப் பரிந்துரைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:19, 4 மே 2012 (UTC)Reply

//சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர்// இந்தக் கட்டுரையில் பல பிழைகள் உள்ளன. உதாரணமாக யவனர் என்பது கிரேக்கர்களைக் குறிக்குமே தவிர அரபுக்களை அல்ல.

தகவல் பிழைகள் நிறைய உள்ளது விக்கியாக்கம் செய்யப்படுதல் வேண்டும். தொகு

இக்கட்டுரையில் தகவற்பிழைகள் நிறைய உள்ளது. கட்டுரையும் தமிழ்நாட்டில் இசுலாம் எவ்வாறு பரவியது என்பதையே விவரிக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் என்ற இனம் பற்றியும், அவர்களின் கலாச்சாராம், செயல்பாடுகள், கட்டிட அமைப்புகள் போன்றவற்றை விவரிக்க தவறுகிறது. ஆர்வமுள்ளோர் கவனித்து சீர் செய்ய வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:53, 13 செப்டம்பர் 2013 (UTC)

பிழையான செய்திகள் தொகு

சிவபெருமான் இராவுத்தர் கோலத்தில் வந்ததார் எனவும், பல கோயில்களில் இராவுத்தர் சிலைகளே குதிரை வீரன் சிலைகளாக இருக்கிறது என்பதைப் போன்ற அபத்தமான பொய்யுரைகள் இக்கட்டுரையில் மலிந்து கிடக்கின்றன. தக்க நடவெடிக்கை எடுக்கப்பெறாவிட்டால் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மீது பொது மக்களுக்கு ஐயம் ஏற்படும் என்பதால் நீக்கப்பரிந்துரைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:25, 17 செப்டம்பர் 2013 (UTC)

ஆதாரங்கள் எதுவும் தரப்படாததால், அப்பகுதியை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 09:19, 17 செப்டம்பர் 2013 (UTC)

நீக்கல் வார்ப்புரு நீக்கம் தொகு

உரையாடல் எதுவும் இன்றி, விரிவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரையை நீக்க வார்ப்புரு இடப்பட்டுள்ளது. அது நீக்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 20:41, 17 செப்டம்பர் 2013 (UTC)

Return to "தமிழ் முஸ்லிம்கள்" page.