பேச்சு:தலித் இலக்கியம்
முதலில் வரையறையத் தரவும், பின்னர் தமிழில் தலித் இயக்கியத்தின் வரலாற்றைத் தரவும், பின்னர் தற்போதைய தலித் இலக்கிய ஆக்கர்களையும் நோக்கங்களையும் தரலாம், பின்னர் விமர்சங்களைத் தரலாம். ஆதாரங்களும் வெளி இணைப்புகளும் இறுதியில் சேர்க்கப்பட வேண்டும். இது ஒரு முக்கிய கட்டுரை, கட்டுக்கோட்புடன் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் பங்களிப்பு தருதல் நன்று. --Natkeeran 22:34, 26 ஜனவரி 2007 (UTC)
குறிப்புகள்
தொகு“ | சாதியும் பண்பாடும் நெருக்கமாகப் பிணைந்த சமூகம் நம் சமூகம். சமத்துவமின்மையை தன் அடிப்படையாகக் கொண்டது நம் சமூகம். ஏற்றத்தாழ்வான படிநிலைகளைத் தன் பண்பாடாக, கலாச்சாரமாகக் கொண்டது நம் சமூகம். சூதும், தந்திரமும், சுரண்டலும் நிறைந்தது நம் சமூகம். எராளமான சடங்குகளில் மக்களை மாட்டி வைத்துள்ள சமூகம், நம் சமூகம். தலித் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய செழுமையான கலாச்சாரம், பண்பாடு, மொழி, அனைத்தையுமே தீண்டாமைக்கு உள்ளாக்கிய சமூகம், நம் சமூகம். கால காலமாக ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த த்லித் மக்களின் எழுச்சிக்குரல்தான் தலித் இலக்கியம். இந்தக் குரல் தவிர்க்க முடியாத காலத்தின் குரல் மட்டுமல்ல, வரலாற்றின் குரலும்கூட. தலித் எழுத்தாளர்கள் வாழ்க்கையை வெறும் வார்த்தைகளால் சொல்லவில்லை. ரத்தமும், சதையுமாக, ஊனும் உயிருமாகச் சொல்கிறார்கள். | ” |
திலகவதி (தொகுப்பு). 2005. கோடை உமிழும் குரல். சென்னை: அம்ருதா.
--Natkeeran 01:39, 18 ஜூலை 2007 (UTC)
// தலித்துகள் மீதான ஒடுக்குமுறையும் தாக்குதல்களும் கொலைகளும் வதைகளும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் அலறல்தான் நமக்குக் கேட்கவில்லை. //
கட்டுரையில் இருக்கும் வாசகங்கள் உண்மையை உரைத்தாலும்,. இது விக்கி நடையா என சந்தேகம் வருகிறது. தனிப்பட்ட ஒருவரின் பார்வையாகவே இது பதிவு செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
- ஜெகதீஸ்வரன்.