பேச்சு:தியூட்டிரியம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதன் தலைப்பை தியூட்ரியம் என மாற்றலாமா? டியூட்ரியம் என்பதற்கும் ஒரு வழிமாற்று விட்டுச் செய்யலாமா? --செல்வா (பேச்சு) 18:18, 8 சூலை 2012 (UTC)Reply

யாரும் மறுப்பு சொல்லாததாலும் சரியான தமிழ் வடிவம் என்பதாலும் ஒரு வழிமாற்று விட்டுவிட்டு மாற்றியிருக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 21:39, 15 ஆகத்து 2012 (UTC)Reply

கன ஐதரசன் என்று இந்தியாவிலும் பார ஐதரசன் என்று இலங்கையிலும் தியூட்டிரியம் அழைக்கப்படுவதுண்டு. ஐதரசனுக்கு நீரியம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதால் இக்கட்டுரையைக் கன நீரியம் எனும் தலைப்புக்கு நகர்த்தவா? --மதனாகரன் (பேச்சு) 03:15, 16 ஆகத்து 2012 (UTC)Reply

தியூட்டிரியம், திரிட்டியம் என பல ஓரிடத்தான்கள் இருப்பதால், அவை எல்லாமும் கன நீரியம் (வெவ்வேறு அளவான நிறை/திணிவு உடைய 'கன' நீரியம்) ஆகையால், சிறப்பாக கன நீரியம் என இதனை மாற்றுவது அவ்வளவு பொருந்தாது. ஐதரசன்-2 அல்லது நீரியம்-2 என்று மாற்றினால் தவறாகாது. எனினும், பலரும் ஐதரசன் என்பது பல மொழிகளில் பலவாறு அழைக்கபப்டுகின்றது என்னும் அடிப்படை உண்மையையே உணராமல் இருப்பது போலத் தெரிவதால், தியூட்டிரியம் என்றே இருக்கட்டும் என்று நினைக்கின்றேன் (எனக்கு நீரியம்-2 என்று இருப்பதில் மறுப்பேதும் இல்லை எனினும்). கட்டுரையின் உள்ளே நீரியம்-2 என்பதையும் குறிப்பிடலாம்.--செல்வா (பேச்சு) 03:26, 16 ஆகத்து 2012 (UTC)Reply
நீரியத்தின் அதிகம் நிலைப்பெறாத பிற ஓரிடத்தான்களைப் பார்க்கவும்.--செல்வா (பேச்சு) 03:29, 16 ஆகத்து 2012 (UTC)Reply

பொதுவாகத் தியூட்டிரியத்தையே கன ஐதரசன் அல்லது பார ஐதரசன் என அழைப்பதுண்டு. D2O என்பது பாரநீர் என்றே அழைக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 04:05, 16 ஆகத்து 2012 (UTC)Reply

நீங்கள் சொல்வது உண்மை, நீர் என்று வரும் பொழுது கனநீர் என்பது இந்தத் தியூட்டிரியம் சேர்ந்த நீராக இருக்கும். இங்கு மீநிறை நீர் (மிகக்கூடிய கனநீர்) என்னும் பொருளில் (super-heavy water) திரிட்டியம் ஆக்சைடு (T2O அல்லது 3H2O) அழைக்கப்படுகின்றது. கனநீர் கதிரியக்கம் தருவதல்ல என்பார்கள், ஆனால் இந்த மீநிறை நீர் கதிரியக்கம் தருவது என்பார்கள். திரிட்டிய-நீர் (மீநிறை நீர்) அடிப்படையில் 20-30 ஆண்டுகள் இயங்கக்கூடிய மின்கலங்கள் கூடச் செய்திருக்கின்றார்கள் (வருங்காலத்தில் பரவலான பயன்பாட்டுக்கு வரக்கூடும்). நாம் கனநீரியம், மீநிறை நீரியம் என்றும் அழைக்கலாமோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. பிற ஐதரசன் ஓரிடத்தான்கள் (இன்னும் கூடிய நிறை உடையவை) குறைந்த காலத்திலேயே நிலையற்றவை ஆகிவிடுபவை. கனநீர் என்பதும் பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் heavy water என்பதன் தமிழ் வடிவம். --செல்வா (பேச்சு) 14:13, 16 ஆகத்து 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தியூட்டிரியம்&oldid=1190564" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தியூட்டிரியம்" page.