பேச்சு:திரை இசைக் களஞ்சியம் (நூல்)

There are no discussions on this page.

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்)--~AntanO4task (பேச்சு) 02:30, 29 ஆகத்து 2018 (UTC)

நீங்கள் சுட்டியுள்ள பக்கத்திலே ஐந்தாவதாக, "நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக இருப்பின் அவருடைய எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் சுமார் 15 நூல்கள் வரை எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு திரையுலக வட்டாரத்தில் வாமனனைத் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். தமிழக அரசின் "கலைமாமணி" விருதினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையினால் நேரடியாக பெற்றவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கே கையளித்து பாராட்டுப் பெற்றவர். இவரது நூலொன்று சிறந்த நூலுக்கான தமிழக அரசின் முதற்பரிசு 1999 ஆண்டில் பெற்றுள்ளது. அது பற்றிய கட்டுரை தமிழ் விக்கியிலேயே இடம் பெற்றுள்ளது. Indian Express பத்திரிகையில் சினிமா விமர்சனங்கள் எழுதி வருபவர். வாமனனைப் பற்றிய கட்டுரை ஆங்கில விக்கியில் உள்ளது. ஆகவே, இவரது "எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம்".
அச்சுப் பிரதியாக உள்ள புத்தகத்துக்கு அதுவே தான் சான்று. வேறு என்ன சான்று வேண்டும். வேண்டுமானால் அந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது என்பதற்கு சான்றாக வணிக நிறுவனங்களின் இணைய தள பக்கங்களை காண்பிக்கலாம். ஆகவே ஒரு புத்தகத்துக்கு அந்தப் புத்தகமே தான் சான்று.
நான் கவனித்தவரையில் நூல்களைப் பற்றிய பின்வரும் கட்டுரைகள் எவ்வித சான்றுகளோ, உசாத்துணைகளோ இன்றி தமிழ் விக்கியில் இடம்பெற்றுள்ளன.
 • தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்(நூல்)
 • தமிழ்ப் பழமொழிகள் (நூல்)
 • தமிழ்ச் செல்வம் (நூல்)
 • அவளுக்காக ஒரு பாடல் (நூல்)
 • உனக்குப் படிக்கத் தெரியாது (நூல்)
 • கணினித்தமிழ் (நூல்)
 • பொன்மொழிகள் (நூல்)
 • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (நூல்)

மேலும் கட்டுரைகள் இருக்கக் கூடும். --UKSharma3 உரையாடல் 05:16, 29 ஆகத்து 2018 (UTC)

சான்றுகள் சேர்க்கப்பட்டுள்ளன --UKSharma3 உரையாடல் 05:44, 29 ஆகத்து 2018 (UTC)

@Uksharma3: குறிப்பிடத்தக்கமைக்கான சான்றுகள் போதாது. தரப்பட்டுள்ள சான்றுகளில் ஒன்று விளம்பர இணைப்பு. இணைப்புகள் எதுவும் தலைப்பின் குறிப்பிடத்தக்கமை குறித்து இல்லை. வரலாற்று சிறப்பு மிக்கவர்கள் என்றால், உ+ம்: கல்கி போன்றவர்கள்.

 • //தமிழ்நாட்டு திரையுலக வட்டாரத்தில் வாமனனைத் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.// அப்படியானால் இந்நூலின் குறிப்பிடத்தக்கமை குறித்து சான்றுகள் கட்டாயம் இருக்க வேண்டுமே. இணையத்தில் தேடிப் பாருங்கள்.
 • //தமிழக அரசின் "கலைமாமணி" விருதினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையினால் நேரடியாக பெற்றவர்.// கலைமாமணி விருது ஆண்டு தோறும் ஏராளமானவர்கள் பெறுகிறார்கள். அதற்காக அவர்களின் அனைத்து நூல்களும் குறிப்பிடத்தக்கவையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
 • //முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கவிதைகளை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கே கையளித்து பாராட்டுப் பெற்றவர்.// அதற்காக இவர் வரலாற்றுச் சிறப்பு மிக்கவராக இருக்க வேண்டுமா?
 • //இவரது நூலொன்று சிறந்த நூலுக்கான தமிழக அரசின் முதற்பரிசு 1999 ஆண்டில் பெற்றுள்ளது. அது பற்றிய கட்டுரை தமிழ் விக்கியிலேயே இடம் பெற்றுள்ளது.// எந்த நூல்? அந்த நூல் பற்றிய கட்டுரை உள்ளதா?
 • //Indian Express பத்திரிகையில் சினிமா விமர்சனங்கள் எழுதி வருபவர். வாமனனைப் பற்றிய கட்டுரை ஆங்கில விக்கியில் உள்ளது. ஆகவே, இவரது "எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம்"// என்று நீங்கள் கருதினால் அது தவறான கருத்து. அப்படியான விதிகள் எதுவும் ஆங்கில விக்கியில் இல்லை.

கலைக்களஞ்சியம் என்ற வகையில் இக்கட்டுரை இங்கு இருக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால், குறிப்பிடத்தக்கமைக்கான தகுந்த சான்றுகள் சேர்த்தால் மகிழ்ச்சி அடைவேன். நானும் இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 08:26, 29 ஆகத்து 2018 (UTC)

மேலே எனது பதிலில் நான் குறிப்பிட்ட பல கட்டுரைகள் எவ்வித சான்றுமில்லாமல் தமிழ் விக்கியில் உள்ளன. அவற்றுக்கு எவ்வித Tag களும் கிடையாது. தமிழ் விக்கியில் எனது கட்டுரைகள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றன என்பதற்கு அந்தக் கட்டுரைகள் போன்ற இந்தக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ள Tag குகள் சான்றாகும்.
கொடுக்கப்பட்டுள்ள ஒரு சான்று இணைப்பு ஒரு தமிழ் நாளேட்டில் வெளியான கட்டுரைக்கானது. அந்த அங்கீகரிக்கப்பட்ட நாளேடு இந்த நூலிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துப் பிரசுரித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க நூல் இல்லாவிட்டால் அவர்கள் அவ்வாறு செய்வார்களா? குறிப்பிடத்தக்கமை பற்றிய வழிகாட்டல் பக்கத்தில் "கட்டாயமில்லை எனினும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள்." எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் ஒரு புகழ் பெற்ற நாளேட்டில் இந்த நூல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சான்றாகாதா?
நூலாசிரியர் பற்றி கட்டுரையில் ஏராளமான மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். அவற்றை விடுத்து மேலே என் பதிலில் நான் எழுதியவற்றை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். தயவு செய்து கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களைப் பார்க்கவும். [[1]] என்ற பக்கத்தையும் பார்க்கவும். (ஆனால் அதில் இணைப்பு கொடுக்கப்படுள்ள ஒலிக்கோப்பு இப்போது நீக்கப்பட்டு விட்டது.)
"*//இவரது நூலொன்று சிறந்த நூலுக்கான தமிழக அரசின் முதற்பரிசு 1999 ஆண்டில் பெற்றுள்ளது. அது பற்றிய கட்டுரை தமிழ் விக்கியிலேயே இடம் பெற்றுள்ளது.// எந்த நூல்? அந்த நூல் பற்றிய கட்டுரை உள்ளதா?"

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999 கட்டுரையைப் பார்க்கவும். அந்த நூலைப் பற்றி விக்கியில் கட்டுரை இதுவரை யாரும் எழுதவில்லை.

முன்பு நான் எழுதிய திரைக்களஞ்சியம் (நூல்) கட்டுரையும் இது போன்றதே. நான் கட்டுரை எழுதிய நூல்கள் எல்லாம் நான் வாங்கி வைத்திருக்கிறேன். அந்த அச்சுப் பிரதிகள் எல்லாம் என்னிடம் உண்டு.
இந்த நூலில் தமிழ் விக்கியில் இடம்பெறாத பல கலைஞர்களைப் பற்றிய தகவல் இருக்கிறது. சில கலைஞர்கள் பற்றி இந்த நூலைத் தவிர வேறு எங்கும் தகவல் கிடையாது. அவர்களைப் பற்றி ஒவ்வொன்றாக கட்டுரை எழுத நினைத்திருந்தேன். அதற்கு முதற்படியாகத்தான் நூலைப் பற்றி எழுதினேன். ஆனால் முதலிலேயே முட்டுக்கட்டை விழுந்துவிட்டது.
நானும் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஊடகங்களில் பங்காற்றியவன். ஆறு ஆண்டுகள் ஒரு சஞ்சிகையை ஆசிரியராக இருந்து வெளியிட்டவன். அதன் பிரதிகள் உங்கள் நூலகத்திலேயே உள்ளன. ஆகவே ஒரு கட்டுரை பற்றித் தீர்மானிக்கும் தகுதி எனக்குண்டு. இந்தக் கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை பற்றிப் போதிய ஆதாரங்கள் உள்ளன என்பதே என் கருத்தாகும். ஆனால் இல்லை என்று நீங்கள் கருதினால் கட்டுரையை நீக்கி விடலாம்.
-UKSharma3 உரையாடல் 13:45, 29 ஆகத்து 2018 (UTC)
உங்கள் பதிவில் காணப்படும் ஒரு விடயத்துக்கு நேற்று நான் பதிலளிக்கவில்லை. அதாவது நான் காட்டியுள்ள மேற்கோள்களில் ஒன்று விளம்பரம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது விளம்பரமல்ல ஆன்லைனில் வாங்குபவர்கள் ஆடர் செய்வதற்கான காட்சிப் பக்கம் மட்டும்தான். அந்தப் பக்கத்தில் நூலைப் பற்றிய அறிமுகம் தரப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை வாங்கச் செய்ய எவ்வித தூண்டுதலும் அந்தப் பக்கத்தில் இல்லை. கடையில் புத்தக அலமாரியில் புத்தகங்களைக் காட்சிப் படுத்துவது போல இங்கும் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.
ஒரு புத்தகம் 1200 க்கு மேற்பட்ட பக்கங்களை கொண்டுள்ளது, 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதிலிருந்தே அந்த நூலின் தராதரத்தை அறியலாம். வெட்டியாக யாராவது ஆயிரம் ரூபா கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குவார்களா? --UKSharma3 உரையாடல் 12:24, 30 ஆகத்து 2018 (UTC)
கட்டுரை குறிப்பிடத்தக்கது என்பதை குறிப்பிடுவதை விட்டுவிட்டு, தேவையற்ற உரையாடல் அவசியமற்றது. அவ்வாறானவற்றுக்கு நான் பதிலளிக்கப்போவதில்லை. விக்கி விதிகளை விளங்கிக் கொண்டு உசாத்துணை சேர்ப்பது அவசியம். 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஊடகங்களில் பங்காற்றியவன் என்பது போன்ற தகுதிகள் விக்கி வழிகாட்டல் இல்லை. தேவையற்ற உரையாடல் தொடர்ந்தால் குறிப்பிட்ட பயனருக்கு பேச்சுப் பக்கத்தில் அறிவுறுத்த வேண்டி வரலாம். கட்டுரையை மேம்படுத்த வழி இருந்தால், அதனைச் செய்வது ஏற்படையது. பேச்சுப் பக்கத்திலுள்ள நியாயப்படுத்தல்கள் கருத்தில் கொள்ளப்பட வாய்ப்பின்றிப் போகலாம். நன்றி--~AntanO4task (பேச்சு) 02:16, 31 ஆகத்து 2018 (UTC)
உங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி.--UKSharma3 உரையாடல் 14:40, 31 ஆகத்து 2018 (UTC)
Return to "திரை இசைக் களஞ்சியம் (நூல்)" page.