பேச்சு:தூரயா
உமாபதி நான் சில திருத்தங்கள் செய்துள்ளேன். சரிபார்க்கவும்.--C.R.Selvakumar 12:11, 27 ஜூன் 2006 (UTC)செல்வா
செல்வா, திருத்தங்களிற்கு நன்றி. காலதாமதாக பதிலளித்தற்கும் மன்னிக்கவும்.--Umapathy 11:51, 20 நவம்பர் 2006 (UTC)
சீனிட் ராக்கெட்]] ஐப் பாவித்துத் தூரயா 3 செய்மதியை ஏவற்திகதியானது கடற் கொந்தழிப்பாலும்(கொந்தளிப்பு?) சீரற்ற காலநிலை(பருவநிலை?) காரணாமகப் பின்போடப்பட்டுள்ளது(தள்ளிவைக்கப்பட்டுள்ளது??). ஏவற்திகதி? பாவித்து? இதற்கு என்ன பொருள்? ஏவல் சரி. திகதி என்றால் என்ன ?. மன்னிக்கவும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தயவு செய்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதவும்(என்னைப்போன்று இலங்கைவழக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு) வினோத் 16:52, 1 டிசம்பர் 2007 (UTC)
கடற் கொந்தளிப்பாலும் சீரற்ற வானிலை காரணமாகவும் சீ லான்ச் சீனிட் ராக்கெட் ஐப் பயன்படுத்தித் தூரயா 3 செய்மதியை ஏவும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று மாற்றி உள்ளேன்.--ரவி 17:07, 1 டிசம்பர் 2007 (UTC)
ஏவுதல் - Launch, திகதி - Date (தமிழ்நாட்டில் என்னபயன்படுத்துகின்றார்கள்). புரியும் படிதான் எழுதவேண்டும் என்பதுதான் என்விருப்பம். பரந்த ஒரு பார்வைதான் தமிழ் விக்கிபீடியாவை வளர்க்கும். --உமாபதி 17:11, 1 டிசம்பர் 2007 (UTC)
உமாபதி, திகதி என்பது தமிழத்தினருக்க அறியப்படாத சொல், இங்கே தேதி என பயன்படுத்துவோம். ரவி இங்கேயே ஒன்றிவிட்டதால் இலங்கை வழக்கிற்கு பழகி விட்டார் போலும் :-). புது பயன்ர் என்ற முறையில் எனக்கு இலங்கை வழக்கு கொஞ்சம் புரிவதற்கு கடினமாகவே உள்ளது. திகதி நிச்சயமாக அனைத்து தமிழர்களையும் குழப்பும். விக்கியில் வேறெங்கேனும் இந்த சொல் பயன்படுத்திருப்பின்(Contextஐ வைத்து புரிந்து கொள்வதாக இருந்தால் மாற்றம் தேவையில்லை.அது மற்றவர்களை குழப்பும் வண்ணம் இருந்தால் மட்டுமே) தேதி என் மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாவித்து என்பதை நான் 'paavi'ththu என படித்தேன் :-)). நிச்சயமாக 'பயன்படுத்துதல்' என்ற சொல் இலங்கைத்தமிழருக்கு புரியும் என நினைக்கிறேன். அப்படியென்றால் 'பயன்படுத்துதல்' என்பதை பயன்படுத்தலாமே(!!). ஏதேனும் தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும் வினோத் 17:26, 1 டிசம்பர் 2007 (UTC)
வினோத், 3 ஆண்டுகள் தமிழிணையத்தில் உழல்வதிலும், பல இலங்கை நண்பர்களுடன் பேச்சு மற்றும் நேரடி நட்புத் தொடர்பில் இருப்பதாலும் எனக்கு இலங்கை வழக்கு கொஞ்சம் :) பிடிபட்டிருப்பது உண்மை தான். திகதி தமிழக ஊர்ப்புறத்திலும் புரிந்து கொள்ளப்படும் சொல் என்றே நினைக்கிறேன். இது குறித்து தமிழ் விக்கிபீடியாவிலும் முன்பே உரையாடி இருக்கிறோம். பாவித்தல் போன்ற சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழக இணைய ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளடைவில், இது இலங்கை வழக்கு - இது தமிழக வழக்கு என்று ஒதுக்காமல் இரு வழக்குகளுடனான அறிமுகத்தைத் தத்தம் வழக்கிலேயே எழுதும் நிலையை அடைய தமிழிணையம் உதவும் என்பது தான் என் கணிப்பு. எழுதும் வழக்கம் மாறாது. ஆனால், குழப்பம் குறையும்--ரவி 17:40, 1 டிசம்பர் 2007 (UTC)
நான் தமிழ் புத்தகங்களைப் (இலங்கை மற்றும் இந்திய) எனது பாடசாலை நாட்களில் நூலகத்தில் விரும்பிப் படிப்பதுண்டு இப்போது உண்மையிலே இலங்கைப் பத்திரிகைகள் தவிர வேறு இந்திய நூல்கள் அவ்வளவாகப் படிப்பதில்லையென்றாலும் தமிழ் யாஹூ! போன்ற செய்தி இணையத்தளங்களை வாசித்து வருகின்றேன். இதற்கு முக்கிய காரணம் ஆர்வம் இல்லையென்றல்ல நேரம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. நீங்கள் எழுதுவதை வாசிப்பதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை. பாடசாலை நாட்களில் வாசிக்கும் போது இது இந்தியா இது இலங்கை எனப் பிரித்து வாசிக்கவில்லை. நான் எப்படி எழுதினாலும் புரிந்து கொள்வேன் ஆனால் மற்றவர்கள் புரிந்து கொள்வார்களா இல்லையா என்பதுதான் நாம் கட்டுரை எழுதும் போதுள்ள சிரமம். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குப் புத்தங்கள் வரும் ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய புத்தங்கள் சஞ்சிகைகள் தாம் இலங்கையில் இருந்து தமிழ்நாடு செல்லும். இணையத்தில் எல்லா நாட்டினரும் பங்களிக்கும் வசதியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கூடுதலானவர்கள் பங்களிக்க முன்வரும்போது இந்தப் பிரச்சினை காலப் போக்கில் குறைவடைந்து ஓர் சீர்தரம் வரும் என்றே நம்புகின்றேன். மன்னிப்பெல்லாம் எதற்கு ?. நண்பர்கள் பிழைவிடும் போது சுடடிக்காட்டினால்தான் நட்பிற்கும் நல்லது நண்பர்களின் முன்னேற்றத்திற்கும் நல்லது. விமர்சனங்களை வரவேற்கின்றேன் வள்ளுவர் சொன்னது போல் நண்பர்கள் பிழைவிடும்போது இடித்துரைக்காதர்கள் கெடுப்பாரும் இன்றிக் கெடும் (மன்னிக்கவும் குறளை மறந்துவிட்டேன்) என்றார். --உமாபதி 18:10, 1 டிசம்பர் 2007 (UTC)
Start a discussion about தூரயா
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve தூரயா.