பேச்சு:தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தேசிய வான்செலவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். Aeronautics என்பதை வான்செலவியல் அல்லது வானோடல் என்று தமிழ்ப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. மேலும், administration என்பதை நிர்வாகம் என்றே தமிழ்ப்படுத்தலாமே, தலைப்பும் நீட்டல் அதிகமின்றி எளிதாக இருக்கும்.--Senthilvel32 (பேச்சு) 11:38, 20 சூன் 2012 (UTC)Reply

ஐக்கிய அமெரிக்கா என்று அடைப்புக்குறிக்குள் தருவது பொருத்தம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 12:21, 20 சூன் 2012 (UTC)Reply
Aeronautics என்பதை எப்படித் தமிழ்ப்படுத்துவது? விக்சனரியில் வான்செலவியல் என்று குறிப்பிட்டிருந்ததைக் கொண்டு அப்படித் தலைப்பிடலாமெனத் தோன்றியது. வானூர்தியியல் என்பதும் பொருத்தமாகத் தெரிகிறது. தேசிய என்று வருவதால் குழப்பம் நேரிடலாம் எனத் தோன்றினாலும், இந்திய, ஐரோப்பிய, ருசிய, சீன, யப்பானிய விண்வெளி ஆய்வு முகமைகளின் பெயர்களில் நாட்டுப் பெயர்களும் சேர்ந்து வருவதால் குழப்பம் வராது என நினைக்கிறேன்.--Senthilvel32 (பேச்சு) 12:39, 20 சூன் 2012 (UTC)Reply
தேசிய என்பது தலைப்பில் குழப்பத்தைத் தரும் என்றால் சுருக்கமாக நாசா எனவே தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 12:51, 20 சூன் 2012 (UTC)Reply
குழப்பமேதும் நேராது என நினைக்கிறேன். கட்டுரை உள்ளடக்கத்தில் மற்ற சொல்லாடல்களைக் குறிப்பிடலாம். தலைப்பைத் தமிழிலேயே வைக்கலாம். Aeronautics-க்கு வானூர்தியியல் பொருத்தமாகத்தானிருக்கிறது. கட்டுரையை 'தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்' என்ற தலைப்புக்கு நகர்த்திடலாம், என்ன சொல்லுகிறீர்கள்.--Senthilvel32 (பேச்சு) 13:10, 20 சூன் 2012 (UTC)Reply
Return to "தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)" page.