பேச்சு:தேனீ
நல்ல தொடக்கம். என் விருப்பக் கட்டுரை. நன்றி செல்வா :-) --Sivakumar \பேச்சு 16:18, 18 மே 2007 (UTC)
நல்லதோர் கட்டுரை. தேனி வளர்ப்பு பற்றி தமிழில் இலங்கை விவசாய ஆராய்ச்சி நிலையம் வெளிவிடும் கமத்தொழில் விளக்கம் என்ற சஞ்சிகையில் அருமையான கட்டுரைகள் பல வருடங்கள் முன் வெளிவந்தன. இவை எவையும் என்னிடம் இப்போது இல்லை. யாரிடமாவது அவை இருந்தால் அவற்றையும் சேர்த்துவிடவும். நன்றி. --Umapathy 06:48, 24 மே 2007 (UTC)
தேனீ பற்றிய இலக்கியத்தில் (மதம், மதம் சாரா) உள்ளதைத் தனிக் கட்டுரையாகச் செய்து இணைப்பு தரலாம் என நினைக்கிறேன். Mahir78 இதனைச் செய்வீர்களா?--செல்வா 16:17, 5 ஜூன் 2007 (UTC)
தேனீ பற்றிய இஸ்லாமிய குறிப்புகள் திடமானதும் ஆதாரப்பூர்வமானதுமாகும். அதனாலேயே சேர்த்தேன். தேவைப்படும் இடத்தில் சேர்ப்பதில்/நீக்குவதில் ஆட்சேபனை இல்லை. --மாஹிர் 23.00, 6 ஜூன் 2007 (UTC)
- அந்தச் சிறு குறிப்பு இங்கு இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். மேலும் தகவல்கள் சேர்த்துத் தனிக்கட்டுரை ஆக்கினால் இங்கிருந்து இணைப்புத் தரலாம்.--Kanags 01:34, 11 ஜூன் 2007 (UTC)
- காலத்தினையும் கடந்து நிற்கும் பல அறிவியல்குறிப்புகள், அனைத்து மதநூல்களிலும் இருக்கிறது. அக்காலத்தில் பல அறிவியல் அறிஞர்களை, கீழ்நிலை மதவாதிகள் கீழ்மை படுத்தியது நாம் அறிந்ததே. இக்கட்டுரையை பொருத்துமட்டில் கட்டுரையின் அளவு சிறியதாக இருப்பதால், மதநூல்கள் என்ற சிறுஅடையாள அட்டையை பயன்படுத்தாமல், பழமையான நூல் என்ற பெருஅடையாள அட்டையப் பயன்படுத்தி, அதன் பொருள் அறிவதே சாலச் சிறந்தது. நீக்குதற்கு உரியவை இதுவரை இருப்பதாக
நான் உணரவில்லை. மூலத்தின் மொழிபெயர்ப்பே இருப்பதாக நான் கருதுகிறேன்.--த* உழவன் 07:05, 15 சனவரி 2011 (UTC)