பேச்சு:தொழிற்பெயர்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Rselvaraj
இக்கட்டுரையில் முதனிலைத் தொழிற்பெயர்களுக்கான காட்டுகள் (கெடு/பெறு/சுடு/பாடு/ஆடு/நட/நில்) தவறானவை என்று எண்ணுகிறேன். இவை வெறும் வினைச்சொற்கள். வினைச்சொற்கள் மாறாமல் (திரியாமல்) பெயராக நிற்பது தான் முதனிலைத் தொழிற்பெயர்கள். காட்டாக, அடி என்பது வினை; 'அவன் என்னை அடித்தான்' என்பது போல. அதே 'அவன் என்னை நிறைய அடி அடித்தான்' என்னும் போது, இங்கே 'நிறைய அடி'யில் உள்ள அடி பெயராகத் தொழிற்படுகின்றது. அதனால், இது முதனிலைத் தொழிற்பெயராகும். -இரா. செல்வராசு (பேச்சு) 17:33, 16 மே 2021 (UTC).