பேச்சு:தோமா (திருத்தூதர்)

தாமஸ் இந்திய வருகை ஓர் கட்டுக்கதை எனும் வாதமும் பல காலமாக வைக்கப்படுவதால் இக்கட்டுரையின் நடுநிலமை கேள்விக்குட்படுத்தப்படுகிறது. சிக்கல் தீரும்வரை வார்ப்புருவை நீக்க வேண்டாம்.--இரா. பாலா (பேச்சு) 14:27, 31 மே 2017 (UTC)Reply

தாமஸ் இந்திய வருகை என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்ட பின்னர் அவர் கொண்டு வந்துசேர்த்த கிறுஸ்துவின் கருத்துகளே இந்து மதமாக மாறியது என்பது போன்ற தவறான கருத்துகளும் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் திருவள்ளுவர் கிறுத்துவர் எனவும் போலியாக சில செப்புப் பட்டைய ஆதாரங்களை உருவாக்கி நிருபிக்க முயன்றனர். பின்னர் தொல்லியல்துறையால் அவை போலியானவை என கண்டுணரப்பட்டன. ஒட்டு மொத்த தமிழகத்தின் அறிவும் தாமஸ் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்ததாகவே இக்கட்டுக்கதைகள் கூறுகின்றன.--இரா. பாலா (பேச்சு) 14:32, 31 மே 2017 (UTC)Reply

இக் கட்டுரையில் இல்லாத கருத்துக்கள் தேவையற்றவை. tamilhindu.com வில் எழுதிய தமிழ்செல்வன் யார் வரலாற்றாசிரியரா? இறையியலாளரா? இவ்வாறான உசாத்துணைகள் ஏற்கத்தக்கவை அல்ல. --AntanO 14:35, 31 மே 2017 (UTC)Reply
POV வார்ப்புரு இணைப்புக்கான சரியான காரணம் இல்லை. இங்கு சிக்கல், நடுநிலை போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். --AntanO 14:38, 31 மே 2017 (UTC)Reply
தாமஸின் இந்திய வருகை குறித்து மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் நடுநிலமையை கேள்விக்குட்படுத்தினேன்.--இரா. பாலா (பேச்சு) 14:40, 31 மே 2017 (UTC)Reply
மாறுபட்ட கருத்துகளை ஆதாரத்துடன் முன் வைக்கவும். இல்லாவிடின் POV வார்ப்புரு நீக்கப்படலாம். --AntanO 14:42, 31 மே 2017 (UTC)Reply
கொடுக்கப்பட்ட ஆதாரங்களை unreliable என நீக்குதல் சரியா? அல்லது அது தொடர்பாக உரையாடுதல் சரியா?. --இரா. பாலா (பேச்சு) 14:46, 31 மே 2017 (UTC)Reply
நீக்கியது பிழையென்றால், அது விளங்காவிட்டால் அது தொடர்பாகவும் உரையாடலாம். தற்போது கொடுக்கப்பட்ட நூலின் பக்க எண், isbn என்ன? --AntanO 14:50, 31 மே 2017 (UTC)Reply

சிக்கலான பகுதிகளுக்கு (சாதி, மத, அரசியல் சார் விடயங்களுக்கு) சாதாரண உசாத்துணைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நம்பகமான மூலங்கள் தேவை. காண்க: en:Wikipedia:Reliable source examples, en:Wikipedia:Reliable sources checklist, en:Wikipedia:Identifying reliable sources --AntanO 15:02, 31 மே 2017 (UTC)Reply

இக்கட்டுரையில் தேவையற்ற விடயங்கள் உள என்பது உண்மைதான். அதற்காக தமிழ்ஹிந்து: தமிழரின் தாய் மதம் என்ற பாதகையுடன் உள்ள tamilhindu.com தோமா பற்றி நடுநிலையான கருத்துத் தருமா? --AntanO 15:09, 31 மே 2017 (UTC)Reply
கட்டுரையைப் படிப்பவர்கள் நான் இணைத்த ஆதாரங்களையும் ஐய்யப்பட வேண்டும், அதனால்தான் நடுநிலமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது என்ற வார்ப்புருவைச் சேர்த்தேன். tamilhindu.com தோமா பற்றி நடுநிலையான கருத்துத் தருமா என்பதைப் போன்ற ஐயம் தாமஸின் இந்திய வருகையை நியாயப்படுத்தும் கிறுத்துவ நிறுவனக்களின் மீதும் ஏற்படுவது இயல்புதானே. மேற்கொண்டு இது தொடர்பாய் விவாதிக்க என்னிடம் ஏதுமில்லை.--இரா. பாலா (பேச்சு) 15:21, 31 மே 2017 (UTC)Reply
கலைக்களஞ்சியத்திற்கு நம்பகமான மூலமே முக்கியம். அவ்வாறு இணைக்க வேண்டும் அல்லது இணைக்கக் கேட்க வேண்டும். ஆதாரமற்ற பகுதிகள், உசாத்துணைகள் நீக்கப்படும். --AntanO 15:28, 31 மே 2017 (UTC)Reply
tamilhindu.com இருந்து மேற்கோள் காட்ட முடியாது என்று தன்நபராக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி முடிவெடுத்து நீக்கவும் முடியாது. https://en.wikipedia.org/wiki/Wikipedia:Identifying_reliable_sources பக்கத்தில் Biased or opinionated sources எப்படிக் கையாழவேண்டும் என்ற வழிகாட்டி உண்டு. அதாவது நடுநிலையான ஊடகங்களில் இருந்தான் மேற்கோள் காட்டவேண்டும் என்று விதி இல்லை. தமிழ் விக்கியில் கட்டுரைகள் தான் நடுநிலையாக இருக்க வேண்டும். குறிப்பான விமர்சனங்களை முன்வைக்க, எடுத்துக்காட்ட tamilhindu.com பயன்படுத்தக் கூடிய ஒரு சான்றே என்பது என் கருத்து. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:05, 5 சூன் 2017 (UTC)Reply
tamilhindu.com நடுநிலையானதா எனத்தான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், நம்பகமான மூலம்தான் தேவை என்றுள்ளேன். நடுநிலையான ஊடகங்களில் இருந்துதான் மேற்கோள் காட்டவேண்டும் என்றேனா? --AntanO 18:09, 6 சூன் 2017 (UTC)Reply

POV தொகு

இந்தியாவிற்குத் தோமா வந்தார் என்பது பற்றி வரலாற்றுக் குறிப்பகள் இல்லை. ஆனால், பாரம்பரிக்கதைகளும் தோமாவின் பணிகள், ரப்பான் பாட்டு ஆகிய நூல்கள் தோமா இந்தியாவில் பணியாற்றினார் எனக் குறிப்பிடுகின்றன. கட்டுரைகளில் தோமாவின் பணிகள், ரப்பான் பாட்டு என்ற பகுதிகளை கேள்விக்குட்படுத்த வேண்டியதில்லை. அவை எதைக் குறிப்பிட்டதோ அவையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. எ.கா: இராவணனுக்கு 10 தலைகள் உள்ளதாக குறிப்பிடும் விடயத்தை ஆராயாமல், நூல் குறிப்பிடுவதாக் குறிப்பிடுவதுதான் கலைக்களஞ்சியத்தின் பாணி.

தோமா இந்தியாவிற்கு வரவில்லை எனவும், அவரது வருகை குறித்த அனைத்து தரவுகளும் கட்டுக்கதைகள் எனவும் குறிப்புகள் உள்ளன. - இப்பகுதிகளுக்கு முறையற்ற உசாத்துணைகள் கொடுக்கப்பட்டடுள்ளன. ஒவ்வொரு சமயங்களிலும் கட்டுக்கதைகள் உள்ளன. அதற்காக "தோமாவின் பணிகள்" எனும் நூல் கட்டுக்கதை, மகாபாரதம் கட்டுக்கதை என்ற முடிவுக்கு வருவது கலைக்களஞ்சியத்திற்கு ஏற்புடையதல்ல. --AntanO 18:05, 2 சூன் 2017 (UTC)Reply

Return to "தோமா (திருத்தூதர்)" page.