பேச்சு:நனிநற்சமூகம்

தமிழாக்கம் தொகு

"யுட்டோபியா" என்பது "நற்சமூகம்" என்று பொருள்படுகிறது. இவ்வாறே இக்கட்டுரையை மொழிமாற்றம் செய்ய வேண்டும். Rasnaboy (பேச்சு) 07:06, 15 மே 2022 (UTC)Reply

கூகுளில் இதன் மொழிபெயர்ப்பு "கற்பனயுலகு" என்று வருகிறது. Bhagya sri113 (பேச்சு) 08:46, 15 மே 2022 (UTC)Reply
நடைமுறையில் இச்சிந்தனை கற்பனையானது என்பதால் அது "கற்பனையுலகு" என்று குறிக்கப்படுகிறது. இதை இக்கட்டுரையிலும் காணலாம். யுட்டோபியா என்ற சொல் குறிப்பது மாசற்ற நல்ல சமூகம் என்பதைத் தான். எனவே "கற்பனையுலகு" என்பதை விட "நற்சமூகம்" என்பதே பொருந்துவதாகத் தெரிகிறது. அந்த நற்சமூகம் என்பது பெரும்பாலும் கற்பனையில் அமைவதாகவே அறியமுடிகிறது. நற்சமூகம் என்பது மிகவும் பொதுப்படையாக தோன்றும் பட்சத்தில் "மிகவும் நல்ல இலட்சிய சமூகம்" என்பதைக் குறிக்க "நனிநற்சமூகம்" என்று குறிப்பிடலாம். Rasnaboy (பேச்சு) 11:28, 15 மே 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நனிநற்சமூகம்&oldid=3432098" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நனிநற்சமூகம்" page.