பேச்சு:நிலைக்குத்து

Add topic
There are no discussions on this page.

நிலைக் கோடு என்பது vertial line என்பதற்கு இணை ஆகுமா? கிடைக் கோடு என்பது horizontal என்பது வழக்கத்தில் இருப்பது அறிவேன். செங்குத்துக் கோடும் என்றும் vertial line குறிப்பிடப்படுகிறது. --Natkeeran 18:50, 4 மே 2008 (UTC)

நிலைக்கோடு என்பது vertail line என்பதற்குப் பொருந்தாது. நெடுவரைக் கோடு -கிடைவரைக் கோடு. (நெடுக்குக்கோடு-குறுக்குக்கோடு), நெடுவரை-கிடைவரை என்றாலே போதும். செங்குத்துக் கோடு என்பது ஒரு கிடைத்தத்திற்கு (சமதளத்திற்கு)ச் செங்குத்தாக உள்ள கோடு (மூன்றாம் திசையில் உள்ள கோடு) (perpendicular line). சமதளத்திலும், வரையப்படும் ஒரு கிடைக்கோட்டு செங்குத்தானான கோடு எனலாம் ( அதாவது செங்குத்து என்பது அந்த நேர்கோட்டுக்கு செங்குத்தாக உள்ளது). ஆனால் ஒரு சமதளம் முழுவதற்குமான செங்குத்துக் கோடு என்பது மூன்றாம் திசையில் உள்ள கோடு. எங்கு தெளிவு வேண்டுமோ அங்கு தளசெங்குத்துக் கோடு என்றுகூட சொல்லலாம். ஒரு முத்திரட்சி வெலியில் ஒன்றுக்கு ஒன்றாக செங்குத்தாக முன்றே மூன்று திசைகள்தாம் இருக்க முடியும். எந்த இரண்டு திசையும் ஒரு சமதளத்தில் அடங்கும். முன்றாவது திசை அந்த தளத்திற்கு செங்குத்தான திசையில் அமைந்த நேர்கோடு. இக்கட்டுரையில் உள்ள நிலைக்குத்து நல்ல சொல்லாட்சி.--செல்வா 14:19, 6 மே 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலைக்குத்து&oldid=238252" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நிலைக்குத்து" page.