பேச்சு:நீலப்புரட்சி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

கட்டுரையில் நீலப்புரட்சி என்பது எந்த மொழி நிறுவனம் எனத் தெரிவிக்கப்படாவிட்டால், தமிழ் விக்கியில் இக்கட்டுரை இடம்பெற்றிருப்பதால் இது ஒரு தமிழ் ஒலிபரப்பு நிறுவனம் எனவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிறுவனம் இப்போதும் இயங்குகிறதா? தகவல்களைச் சரியாகத் தாருங்கள் சிவகுமார்.--Kanags \உரையாடுக 22:59, 11 மே 2012 (UTC)Reply

நீலப்புரட்சி, இந்தியாவில் நடைபெற்ற பொருளாதரப் புரட்சியை குறிக்க வேண்டும். எப்பொழுது என்ற தகவல் சரியாக தெரியவில்லை. பழுப்பு புரட்சி என்பது கோதுமை உற்பத்தியை பெருக்கவும், நீலப புரட்சியின் இந்தியாவில் மீன் உற்பத்தியை பெருக்கவும் நடைபெற்றவை. மஞ்சள் புரட்சி இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை பற்றியது. 1990 களில் அல்லது 1980 களின் பிற்பகுதியில் நிகழ்ந்தது. இவை தவிர உணவுக்குத் தேவையான இறைச்சி, கோழி ஆகியனவற்றின் உற்பத்தி பெருக்கத்திற்கு சிகப்பு புரட்சி, என இந்த புரட்சிகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரம் தொடர்புடையவை. இது தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள், கட்டுரையை தொடங்கி மேம்படுத்தலாம். வானொலியை குறிக்கும் கட்டுரையை தனியாக உருவாக்கலாம். --எஸ்ஸார் (பேச்சு) 12:50, 13 மே 2012 (UTC)Reply

இதே கட்டுரையில் நீலப்புரட்சி (இந்தியா) என்ற உபதலைப்பில் இத்தகவல்களைச் சேர்த்து விடுவது வாசகர்களுக்கு பயனுடையது. அல்லது நீலப்புரட்சி (இந்தியா) என்ற தனிக்கட்டுரையையும் ஆரம்பிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 22:45, 13 மே 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலப்புரட்சி&oldid=1107451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீலப்புரட்சி" page.