பேச்சு:நோர்ட்டன் ஆண்டிவைரஸ்
தலைப்பை நோட்டன் நச்சுநிரல் என மாற்றும்படி பரிந்துரைக்கிறேன்.--Kanags 21:19, 11 அக்டோபர் 2007 (UTC)
நோட்டன் என்பதே சரியான உச்சரிப்பு. நோட்டன் நச்சுநிரலெதிரி? கோபி 22:24, 11 அக்டோபர் 2007 (UTC)
நார்ட்டன் என்பது சரியாக இருக்கும் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் நினைப்பது. அண்மையில் டெரன்ஸ்சுடன் காங்கோ என்னும் சொல் பற்றி உரையாடுகையில் கூறியவாறு, "கேள்வி" (காதால் கேட்பது) சற்று வேறாக உள்ளது. இங்கு அமெரிக்காவில் நார்ட்டன் என்றுதான் கூறுகிறார்கள் (இதனை நா-நோ ஆகிய இரண்டிற்கும் நடுவானது என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் ரகரம் மிகத்தெளிவாக உள்ளது.) நோர்ட்டன் அல்லது நார்ட்டன் என்பது பொருந்தும். --செல்வா 23:02, 11 அக்டோபர் 2007 (UTC)
தலைப்பை நோர்ட்டன் ஆண்டிவைரஸ் என மாற்றியுள்ளேன். இது வர்தகப் பெயராதலின் கட்டுரையின் தலைப்பில் ஆண்டிவைரஸ் அல்லது அன்ரிவைரஸ் என்றவாறு இருப்பது தான் இதுவரை காலமும் கணினி தொடர்பான கட்டுரைகளில் கையாண்டோம் அவற்றையே தொடர்வதுதான் நல்லது. கட்டுரையில் கோபி சொல்வதுபோன்று நச்சுநிரலெதிரி என்றவாறு கையாளாலம். பார்க்க கணினி நச்சுநிரல். மேலேயுள்ள வழிகாட்டல்களுக்குத் தேவையான வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கி விடுகின்றேன். Antivirus என்பதற்கு இலங்கையில் அன்ரிவைரஸ் என்றவாறு பலுக்குகின்றார்கள் மேலே தலைப்பில் ஆண்டிவைரஸ் என்றவாறு எழுதியுள்ளேன் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும். --Umapathy (உமாபதி) 02:00, 12 அக்டோபர் 2007 (UTC)
- நச்சுநிரல்தடுப்பி என்பது நச்சுநிரலெதிரி என்பதைவிட கூடுதல் பொருத்தமானதாக இருக்குமா?--செல்வா 15:57, 12 அக்டோபர் 2007 (UTC)
- ஆம் அதுவே கூடுதலாகக் கருத்தை விளக்கும் வண்ணம் உள்ளது. வேண்டிய மாற்றங்களைக் கட்டுரையில் செய்துவிடுகின்றேன். வைரஸ் பாதிக்கப்பட்டு ஆரம்பிக்காமல் முரண்டுபிடிக்கும் கணினிகளைச் சரிசெய்ய நொப்பிக்ஸ் லினக்ஸ் ஐப் பாவித்து வருகின்றேன். மற்றவர்கள் என்ன செய்கின்றார்களோ தெரியவில்லை. --Umapathy (உமாபதி) 17:03, 12 அக்டோபர் 2007 (UTC)
Microsoft office போல் norton antivirusம் வணிகப் பெயர் என்று நினைக்கிறேன். அதனால் கட்டுரைத் தலைப்பு அப்படியே இருக்கட்டும். மொழிபெயர்க்க வேண்டாம். கட்டுரைக்குள் antivirus software என்பதைக் குறிக்கும் இடங்களில் நச்சுநிரற்கொல்லி என்று பயன்படுத்தலாம். களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போல் நச்சுநிரற்கொல்லி என்ற சொல்லை ஆளலாம். விக்சனரி குழுமத்திலும் இந்த சொல் குறித்து உரையாடப்பட்டது.--Ravishankar 22:16, 12 அக்டோபர் 2007 (UTC)
- கிருமி, களை என்றவுடன் என்மனதில் உயிருள்ளது போன்ற ஓர் உணர்வே ஏற்படுகின்றது வைரஸ் உயிரற்றவை ஆதலினால் நச்சுநிரல் (வைரஸின் பொருள் நச்சு என்பதால்) என்பதைக் கையாளாலாம். தவிர களைக்கொல்லி மற்றும் பூச்சிகோல்லி போன்ற சொற்களில் எனக்கு இப்போதைக்கு உடன்பாடு கிடையாது. மீண்டும் ஒருபதிலை விபரமாகத் தருகின்றேன். --Umapathy (உமாபதி) 12:33, 13 அக்டோபர் 2007 (UTC)