பேச்சு:பச்சை ஈப்பிடிப்பான்

பக்கம் உருவாக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் இதன் தலைப்பைப் பற்றி பேசுவது சரியா எனத் தோன்றுகிறது. பறவைகளுக்கு ஆங்கிலேயர்கள்/ஆங்கிலம் பேசுபவர்கள் இட்ட ஆங்கிலப்பெயர்களை அப்படியே மொழிபெயர்த்து எழுதுவது சரியா? (காண்க. தியோடார் பாஸ்கரன் எழுதிய கட்டுரை [1]). இப்பக்கத்தின் தலைப்பு Green = பச்சை; Bee-eater = ஈப்பிடிப்பான். வழக்கில் தமிழ்ப்பெயர்கள் இல்லாதபோது அவ்வாறு செய்யலாம்; ஆனால் இக்குருவி பஞ்சுருட்டான் எனவும் பச்சைப் பஞ்சுருட்டான் அல்லது சின்னப் பஞ்சுருட்டான் எனவும் அழைக்கப்படுகிறது (தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர் க. ரத்னம் - #233 - பக். 49 - 1998 - உலகம் வெளியீடு). வழிமாற்று (Redirect) உள்ளது எனினும் தலைப்பை முதன்மையாகப் பஞ்சுருட்டான் எனவும் வழிமாற்றாக பச்சை ஈப்பிடிப்பான் எனவும் மாற்றலாமா?--பரிதிமதி (பேச்சு) 06:35, 22 மார்ச் 2013 (UTC)

Return to "பச்சை ஈப்பிடிப்பான்" page.