பேச்சு:பச்சை குத்துதல்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்

இலங்கையில் பச்சை குத்துதலை மரபுவழித் தொழிலாகக் கொண்ட ஒரு இனத்தினர் இருக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி என்னவென்று தெரியாது. தங்கள் இனத்துக்குள்ளே ஒரு மொழியைப் பேசுகின்றனர். அது தமிழிலுடன் தொடர்புடைய ஒரு மொழியாகவே இருக்கின்றது. ஆனால் (தமிழ்நாட்டு வழக்கில்) தமிழிலும் பேசுவார்கள். தற்காலத்தில் சிங்களம் பேசுக்கூடிய சிலர் இருப்பதையும் காணக்கிடைக்கிறது. இவர்கள் திராவிட மரபினர்; ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்திருக்க வேண்டும். இவர்கள் எந்த இனத்துடன் இணைந்து வாழ்வதைக் காண்பதற்கில்லை. கல்வி அறிவு பெற்றவர்களாகவும் இல்லை. அவர்கள் குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதையும் காண்பதற்கு இல்லை. ஊர், வீடு என்று எதுவும் இல்லை. கூட்டம் கூட்டமாக ஓரூரில் இருந்து இன்னொரு ஊர் என நாடோடிகளாக சென்று கூடாரம் இட்டு வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். ஆனால் பச்சைக் குத்தும் கலையை மரபுவழித்தொழிலாக செய்துவருபவர்; பரம்பரைப் பரம்பரையாக இத்தொழிலையை தங்களூக்குள்ளாகவே நகர்த்தி வருபவர்.

இங்கே எழும் கேள்வி என்னவென்றால் இன்று பச்சை குத்தும் கலையில் வரலாறு என கி.மு 4000 முதல் 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்பவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர்களது வாழ்க்கை முறையோ நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டது. எவ்வித கல்வியறிவும் அற்ற சமுதாயமாக இருந்தும் வாழ்நாளில் அழியாத பச்சைக் குத்துதலுக்கு பயன்படும் மூலக்கலவைகளை இவர்கள் எவ்வாறு செய்கின்றனர்? இவ்வாறான பல அரிய கலைகள் திராவிட மரபினருக்குள் இருந்தும் அதற்கு எம்மவர்கள் உரிய மதிப்பு கொடுக்காமலும், வளர்க்காமலும் அழிவுற்று செல்கின்றனவே! இவர்கள் பச்சை குத்துதலை எப்படி மரபுவழித் தொழிலாகக் கொண்டனர்? இதன் வரலாறு என்ன? இவர்களில் இந்த கலைப் பற்றிய ஆய்வுகள் எதுவும் எங்கும் செய்யப்பட்டுள்ளதா? தென்னிந்தியாவில் இவர்கள் வசிக்கின்றனரா? இவை நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.--−முன்நிற்கும் கருத்து 219.77.144.37 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. பெரும்பாலும் இவ்வாறான சமூகவியல் ஆய்வுகள் கீழைத்தேய நாடுகளில் குறைவாக இருப்பதனால் நம்முள் காணப்படும் அரிய பொக்கிசங்களை நாம் வேற்று நாட்டவர்களில் சொத்தாகப் படிக்கவும் காணவும் நேர்கிறது.--சஞ்சீவி சிவகுமார் 05:58, 25 நவம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பச்சை_குத்துதல்&oldid=936586" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பச்சை குத்துதல்" page.