பேச்சு:பஞ்சமர் இலக்கியம்
//ஈழத்து தலித் மக்களின் ஆக்கங்கள்// எல்லாம் தலித் இலக்கியங்கள் ஆகி விடாது. ஈழத்தின் பல இடங்களிலும் சமகாலத்தில் ஒருவர் தன் சாதியைச் சொன்னாலொழிய நாமாக அறிய வாய்ப்பில்லை. அந்த வகையில் யார் தலித் யார் தலி இல்லை என்பதை எப்படித்தான் அறிவது? ஒருவரது சாதி கேட்பது மிகவும் அநாகரிகமான ஒன்றாகவே இப்பொழுது கருதப்படுகிறது.
சாதி மறைவாகவே புழங்கப்படுகிறது. குறிப்பாகத் திருமணங்களில். இக்கட்டுரையுடன் நேரடித் தொடர்பற்றதெனினும் ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
70களில் பாடசாலையில் ஒன்றாகக் கற்ற இரு நண்பிகள். விடுதியில் ஒன்றாக இருந்த, ஓரளவு நெருங்கிய தோழிகள். இருவருக்கும் இப்பொழுது பிள்ளைகள் உள்ளனர். பாடசாலைக்காலத்தின்பின்னர் தொடர்புகள் இருக்கவில்லை. 2000களின் நடுப்பகுதியில் மீண்டும் சந்திக்கின்றனர். அண்மையில் (2007) ஒருவர் மற்றவரது பிள்ளைக்கும் த்ன் பிள்ளைக்கும் திருமணம் பேச விரும்பினார். ஆனால் சாதி தெரியவில்லை. வேறு வேறு ஊர்க்காரர்கள். எங்கு விசாரிப்பதென்பதும் தெரியவில்லை. சமகாலத்தில் கல்விகற்றவன் என்பதால் இந்த விசாரிப்பு எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவருக்கு வந்தது. கடைசிவரை முடியவில்லை. இதனால் அந்தத் திருமணப் பேச்சு இதுவரை தொடங்கவேயில்லை.
ஈழத்தில் சாதியத்தின் இன்றைய நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு இது. இணையத்துக்கும் அன்றாட வாழ்வுக்கும் நிறையத்தூரம் :-) கோபி 18:50, 13 அக்டோபர் 2007 (UTC)
இன்னொன்று: என் தம்பிக்கு (வயது 19) தன் சாதி என்னவென்று தெரியாது. 1995 இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்தவன் அவன். சாதி தெரியா புதிய தலைமுறையின் தோற்றத்துக்கான காரணங்களில் ஒன்று தொடர்ச்சியான இடப்பெயர்வுகள். புலம்பெயர்ந்தவர்கள் சாதியைக் காவித் திரியுமளவு இடம்பெயர்ந்தவர்கள் காவவில்லை.
ஈழத்தில் பஞ்சமர் இலக்கியம் என அழைக்கப்பட்ட ஒன்று தலித் இலக்கியம் எனப்படுவதன் பின்னுள்ள நுண்அரசியலை விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இப்பின்னூட்டங்கள்.கோபி 19:22, 13 அக்டோபர் 2007 (UTC)
ஈழத்துத் தலித் இலக்கியத்தில் பிராமணர் தலித்துக்கள்?
தொகுஇன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி எனப்படுகின்ற டானியல் தன் எழுத்துலக வாரிசென விதந்துரைத்த தெணியான் எழுதிய நாவல் பொற்சிறையில் வாடும் புனிதர்கள். அந்நாவல் பிராமணர்கள் படும் அவலம் பற்றியது. (நான் வாசிக்கவில்லை. தகவல் உறுதிப்படுத்தினேன்.) தமிழகத்துக்கும் ஈழத்துக்குமுள்ள இடைவெளியை இதுவேனும் விளக்கும் என நம்புகிறேன். கோபி 18:57, 13 அக்டோபர் 2007 (UTC)
- கோபி, உங்கள் கருத்துடன் முற்றிலும் வேறு படுகின்றேன். சாதி திருமணத்தின் ஊடாகவும், அமைப்புகள் ஊடாகவும் மிக ஆணித்தரமாக தமிழ்ச் சூழலில், புகலிடச் சூழலில் இருக்கின்றது. ஒரு ஊர் நோக்கில் ஒன்று கூடும் பொழுதும் கூட சில சாதிகள் ஒதுக்கப்படுவதை இயல்பாகக் காணலாம். இங்கு இலங்கையில் சாதிப் பிரச்சினை இல்லை என்று நீங்கள் பல தளங்களில் நிலைநாட்ட முயல்வதாக தெரிகின்றது. அது உங்கள் நல்நோக்கான எதிர்காலத்தை வேண்டிய ஒரு கற்பனையாக இருக்கலாம், நடைமுறை அல்ல. இத்துடன் இதை இந்த தளத்தில் நிறுத்தி கொள்வோம், விரும்பினால் தனிமடல் இடவும், மேலும் அலசலாம். --Natkeeran 19:28, 13 அக்டோபர் 2007 (UTC)
ஈழத்தில் எத்தனை ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்களில் வாழ்கின்றனர்?
//இலங்கையில் சாதிப் பிரச்சினை இல்லை என்று நீங்கள் பல தளங்களில் நிலைநாட்ட முயல்வதாக தெரிகின்றது//
நற்கீரன், நான் எங்கும் எதனையும் நிலைநாட்ட முயலவில்லை. இங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் சாதிப் பிரச்சினை பற்றிப் பேசவல்ல. ஈழத்துப் பஞ்சமர் இலக்கியத்தை தலித் இலக்கியம் என அழைப்பதை நிலைநாட்டுவதன் பின்னுள்ள நுண் அரசியலை மாத்திரமே பதிவுசெய்ய விரும்பினேன்.
திருமணப் பேச்சு, சாதி தெரிதல் என்பவை பற்றிய என் குறிப்புக்களும் கூட சாதிபற்றி அல்ல.
பஞ்சமர் இலக்கியம் என்ற சொல்லாடர் புழக்கம் குறைந்து ஈழத்துத் தலித் இலக்கியம் என்பது முதன்மைப் படப் போகிறது என நான் எதிர்பார்க்கிறேன். அந்த மாற்றத்துக்கான காரணங்களிலொன்றைப் பதிவுசெய்கிறேன். விக்கிபீடியா என்ற கலைக்களஞ்சியத்தின் பேச்சுப் பக்கத்தில் அதனைப் பதிவுசெய்து வைக்க விரும்பினேன். அவ்வளவுதான்.
இலங்கையில் சாதிப் பிரச்சினையில்லை என்று சொல்லுமளவு சமூகப் பிரக்ஞையற்ற முட்டாளாக என்னை நீங்கள் கருதுவது வியப்பளிக்கிறது. கோபி 19:38, 13 அக்டோபர் 2007 (UTC)
- கடினமாமன சொற்களை தயந்து தவிருங்கள். உங்களை தவறாக புரிந்திருந்தால் அது என் தப்பே. பொறுத்துதருளவும். நீங்கள் கூறும் நுண் அரசியல் எனக்கு புரியவில்லை என்ற என் அறிவாண்மையை மட்டும் இங்கு குறித்துக் கொள்கிறேன். நன்றி. --Natkeeran 19:47, 13 அக்டோபர் 2007 (UTC)
மன்னிக்கவும் நற்கீரன். என் பேச்சுப் பக்க இடுகைகளுக்கான நோக்கத்தை விளக்காதது என்னுடைய தவறுதான்.
//திருமணப் பேச்சு, சாதி தெரிதல் என்பவை பற்றிய என் குறிப்புக்களும் கூட சாதிபற்றி அல்ல.//
என் 1995இல் சாதி தெரியாமல் கொழும்புக்கு இடம்பெயர்ந்த என் தங்கைக்குச் சாதி தெரியும்..... சாதிமுறையின் கேவலம் முன்னெப்போதையும் போலவே இப்பொழுதும் தொடருகிறது.
ஈழத்தில் சாதிப் பயன்பாடு தொடரும் தளங்கள் மற்றும் முறை மிக மாறிப் போயுள்ள சூழலில் மிக வித்தியாசமான சாதி அமைப்பையும் அதில் இறுக்கத்தையும் கொண்ட தமிழகச் சாதியம் தொடர்பாக எழுந்த தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் ஈழத்துப் பஞ்சமர் இலக்கியத்துக்குச் சூட்டப்படுவது ஏன்?
தமிழகம் தலித் இலக்கியம் எழுதமுன்னர் டானியல் ஈழத்தில் எழுதிவிட்டார். தலித் இலக்கியம் ஈழத்தில் ஒன்றும் தமிழக இறக்குமதியல்ல. பெயரை இறக்குமதி செய்வதற்கான தேவையின் அவசியம் இப்பொழுது என்ன?
நாம் த.வி.யில் எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பின் பின்னாலும் கூட எங்கோ ஓர் அரசியல் ஒளிந்துகொண்டுதானிருக்கிறது. எழுத்தின் எல்லாவித நுண்ணரசியல்களையும் வன்முறையையும் அதிகாரத்தையும் பகுத்தாய்வது எதிர்காலத்தில் மிக இலகுவாகும். ஈழத்தின் எல்லா வெளியீடுகளும் மின்வடிவில் கிடைக்கும் ஒரு காலத்தில் ஆராயப்புறப்படும் ஒருவருக்கு எல்லா ஆதாரங்களும் கிடைக்கும். தங்களைப் புத்திசாலிகளாகக் கருதி எல்லோர் தலையிலும் மிளகாய் அரைப்போரைக் காலம் தோலுரிக்கும். (இதனை விக்கிபீடியா தொடர்பாகக் கூறவில்லை) ஈழத்து இலக்கியம் தொடர்பான ஆராய்ச்சிக்கு ஆதாரமாகப் போகும் நூல்கள்/இதழ்களை மின்வடிவமாக்கும் முயற்சியில் ஓர் அணிற்குஞ்சளவேனும் பங்களித்தவன் என்ற வகையில் இக்கலைக்களஞ்சியப் பேச்சுப் பக்கத்தில் சில குறிப்புக்கள். அவ்வளவுதான். கோபி 19:58, 13 அக்டோபர் 2007 (UTC)