பேச்சு:பனிக்கடல் யானை

தந்தப்பல் கடற்குதிரை? --AntanO 11:52, 3 செப்டம்பர் 2016 (UTC)

தந்தம் என்பது பல். சமற்கிருதச்சொல். யானையின் தந்தம் என்பது யானையின் பல் அல்லது எயிறு என்பதே. கோடு என்பது வளைந்தது, யானைக்கோடு என்பது யானையின் பல் வளைந்து இருப்பதால் யானைக்கோடு எனப்பெயர்பெற்றது. எயிறு என்பது பல்லின் இன்னொரு சொல். இதன் பல் யானையில் கோடுபோல நீண்டு இருப்பதாலும் பனிக்கடல்களில் வாழ்வதாலும் மிகப்பெரியதாக யானைபோல் இருப்பதாலும் பனிக்கடல் யானை எனலாம் என நினைக்கின்றேன். அறிவியற்பெயராகிய Odobenus என்பதில் உள்ள odo என்பது பல்லைக்குறிப்பதே. நெடும்பல் பனிக்கடல் யானை. பனி எயிறி = பனியெயிறி என்றும் சொல்லலாம். யானை பன்றி போன்றவற்றின் நீண்ட பல்லை, வாய்க்கோடு என்னும் சொல்லாட்சி குறிக்கும். எனவே பனிவாய்க்கோடன் எனவும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 00:49, 4 செப்டம்பர் 2016 (UTC)
இதனுடன் Tusk, ivory என்பவற்றுக்கான சொல் பற்றியும் தெளிவு பெறுதல் வேண்டும் எனக் கருதுகிறேன். விக்சனரி "தந்தம்" என்பதற்கு மிக நீளமாக வளர்ச்சியடைந்த யானையின் பல்; யானை முதலியவற்றின் கொம்பு, பல், மலை முகடு ஆகிய பொருள்களைத் தருகின்றன. இலங்கை பேச்சு வழக்கில் தாடைகள் (jaw) இணையும் பகுதி அல்லது தாடை அடிப்பகுதியைக் (படிமம் Masseter) குறிக்க தந்தம் என்ற பயன்படுத்தப்படுவதுண்டு. (தமிழ்நாட்டிலும் இவ்வழக்கம் உள்ளதா?) இதையொட்டி தந்தப்பல் என்ற பயன்பாடும் உள்ளது. Tusk என்பதை (கொம்பு போல் நீட்டிக் கொண்டிருப்பதால்) கொம்புப்பல் எனலாமா?
லிப்கோ அகராதி walrus என்பதை கடற்குதிரை, கடல் பசு என்ற பெயருடன் தொடர்புபடுத்துகிறது. en:Walrus#Etymology என்பதற்கேற்ற அப்பெயரைக் குறித்தார்களோ தெரியாது. அதன்படி, குதிரைத் திமிங்கிலம் எனலாமா? யானை தவிர்த்த பனிவாய்க்கோடன் என்பதும் ஏற்புடையதாகவுள்ளது. --AntanO 01:59, 4 செப்டம்பர் 2016 (UTC)
பெரிதாயிருப்பதால் பனிக்கடல் யானை என்பதும் ஏற்றது. --AntanO 02:00, 4 செப்டம்பர் 2016 (UTC)
தந்தம் என்பதும் dento- (dental, denstist) என்பதும் ஒன்றே. //இலங்கை பேச்சு வழக்கில் தாடைகள் (jaw) இணையும் பகுதி அல்லது தாடை அடிப்பகுதியைக் (படிமம் Masseter) குறிக்க தந்தம் என்ற பயன்படுத்தப்படுவதுண்டு. (தமிழ்நாட்டிலும் இவ்வழக்கம் உள்ளதா?) // தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. கீழ்த்தாடையின் உதட்டுக்குக்கீழ் உள்ள முன்பகுதியை நாடி என்பார்கள். elephant seal உம் walrus உம் மிகப்பெரிய விலங்குகள். elephant seal என்னும் விலங்கு ஆழ்ந்து நீஞ்சும் விலங்கு. ஒரு கிலோமீட்டர் அல்லது 2 கிலோமீட்டர் கடலாழத்தில் நீஞ்சல்வல்லது. பனிக்கடல் யானை அல்லது வால்ரசு குறைந்த ஆழத்திலேதான் உலவும். --செல்வா (பேச்சு) 03:42, 4 செப்டம்பர் 2016 (UTC)
குதிரைத் திமிங்கிலம் என்பது தமிழில் பொருத்தமாக இல்லை என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 03:44, 4 செப்டம்பர் 2016 (UTC)
walrus என்பதை பனிக்கடல் யானை என்றோ பனிவாய்க்கோடன் தலைப்பிடலாம். Elephant seal என்பதை கடல் யானை எனலாமா? --AntanO 04:01, 4 செப்டம்பர் 2016 (UTC)

Start a discussion about பனிக்கடல் யானை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனிக்கடல்_யானை&oldid=2655818" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பனிக்கடல் யானை" page.