பேச்சு:பன்னாட்டுத் தாய்மொழி நாள்
Latest comment: 10 மாதங்களுக்கு முன் by கா. சேது
கனகு நல்ல பதிவு! ஒன்றை அறிந்து கொண்டேன் இன்று.--செல்வா 13:35, 21 பெப்ரவரி 2007 (UTC)
கட்டுரைக்கு நன்றி, கனகு. தமிழ்நாட்டில் மொழிப்போரில் உயிர் இழந்தோர் இதை விட அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், நாம் ஒன்றும் செய்யவில்லை :(--Ravidreams 14:50, 21 பெப்ரவரி 2007 (UTC)
தலைப்பில் ("பன்னாட்டுத் தாய்மொழி" ) ஒற்று மிகுந்துள்ளது சரியா?. எல்லாத் தாய்மொழிகளையும் போற்றும் பன்னாட்டு நாள் என்பதைக் குறிக்க "பன்னாட்டு தாய்மொழி நாள்" எனவாறுதானே குறிப்பிடல் வேண்டும் ? --K. Sethu | கா. சேது (பேச்சு) 03:55, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- @கா. சேது:, இங்கு ஒற்று மிகுவதே சரி.அனைத்துலகத் தாய்மொழி நாள் அல்லது பன்னாட்டுத் தாய்மொழி நாள். @Neechalkaran:--Kanags \உரையாடுக 06:44, 22 பெப்பிரவரி 2024 (UTC)
- அனைத்துலகத் தாய்மொழி எனில் அனைத்து உலகத்துக்குமான ஒரு தாய்மொழி என்று தானே பொருள். பன்னாட்டுத் தாய்மொழி எனினும் பல நாடுகளுக்கும் அல்லது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஒரே தாய்மொழி எனவாறான பொருண் மயக்கம் ஏற்படுகிறது அல்லவா? K. Sethu | கா. சேது (பேச்சு) 14:27, 22 பெப்பிரவரி 2024 (UTC)