பேச்சு:பயன்பாட்டுக் கணிதம்

செயல்முறைக் கணிதம் வேறு பயன்பாட்டுக் கணிதம் அல்லது பயன்முகக் கணிதம் என்னது வேறு. வடிவவியலில் ஒரு சதுரத்தை முக்கோணங்களாக பகுத்து ஒட்டி பிற வடிவுகள் காண்பது, ஒரு நாணையத்தைப் பல முறை சுண்டி பூவா தலையா என்பதை பார்த்து குறிப்பது போன்ற செய்முறைவழி அலசும்,கற்கும் கணிதத்தை செயல்முறை கணிதம் எனலாம். ஆனால் பயன்பாட்டு அல்லது பயன்முகக் கணிதம் என்பது ஒரு துறையில் ஒருதேவைக்காகக் பயன்படுத்தத் தக்க கணிதத்தைப் பயன்முகக் கணிதம் எனலாம். --செல்வா 13:59, 9 ஜூன் 2009 (UTC)

எது எப்படி இருப்பினும் Applied Maths என்பதை நாம் பிரயோக கணிதம் (பிரயோகம் தமிழ்ச் சொல் இல்லை) என்றே படித்து வந்தோம். தமிழகத்தில் இப்பாடநெறியை எவ்வாறு அழைத்தார்கள் என்று அறிய ஆவல்.--Kanags \பேச்சு 21:21, 9 ஜூன் 2009 (UTC)
தமிழ்நாட்டில் என்ன பயன்ன் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. பிளசு-2 கல்வியில் இக்கருத்து அறிமுகப்படுத்தப்படுகின்றதா எனவும் தெரியவில்லை. பல்கலைக்கழகக் கல்வியில் தமிழ் எவ்வளவு உள்ளது என்றும் தெரியவில்லை.--செல்வா 23:17, 9 ஜூன் 2009 (UTC)
Return to "பயன்பாட்டுக் கணிதம்" page.