பேச்சு:பரிவேடம்
ஜோதிடக் குறிப்பு
தொகுபழங்காலத்தமிழர்கள் தமிழ்நாட்டின் பருவநிலை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படியிருக்கும், போர்/அமைதி ஆகிய நிலவரங்கள், தொத்துநோய்கள், பஞ்சம், வெள்ளம், அரசியல் நிலை, இயற்கை ஊறுகள் போன்றவற்ரை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கென்று பல முறைகளை வைத்திருந்தனர்.பரிவேடம், மகவோட்டம், பிறையின் கோடுகள், தெற்கிற்கு ஓடிய விடிவெள்ளி, பிராணிகளின் பெருநகர்வு, தூமகேதுக்களின் தோற்றம், சில கிரகங்களின் சேர்க்கை அல்லது இருக்குமிடங்கள் போன்றவை அந்த வழிமுறைகளில் அடங்கும்.சில சமயங்களில் சூரியனையோ அல்லது சந்திரனையோ சற்று இடைவெளி விட்டு சுற்றிலும் ஒரு வட்டம் விளங்கும். அந்த வட்டத்தில் ஏழு வர்ணங்கள் - வானவில்லின் வர்ணங்கள் - விளங்கும். இதையே பரிவேடம் அல்லது பரிசேஷம் என்றோ சொல்வார்கள்.கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி எழுதிய மகவோட்டம் கட்டுரை