பேச்சு:பருவ காலம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை in topic இந்திய கோடைகாலம்

கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. இந்தக் கட்டுரையின் அசல் தலைப்பான பருவகாலம் என்பது ருது காலம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. ருது என்பது சமஸ்கிருத சொல் என்பதோடு பொதுவாக தமிழில் வழங்கப்படும் சொல் அல்ல. பருவகாலம் என்பதே இயல்பானதும் மக்களால் பயன்படுத்தப்படும் சொல்லும் ஆகும். எனவே தலைப்பு மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பிற்குரியவர்கள் இதனை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --இரா. செந்தில் 03:50, 13 ஜூலை 2010 (UTC)


இந்திய கோடைகாலம்

தொகு

கட்டுரையில் "மேலும் பார்க்க" எனும் உப தலைப்புடனான பகுதியிலுள்ள பட்டியலில் முதலில் உள்ளது "இந்திய கோடைகாலம்". தொடுப்பு ஒன்றும் ஏற்படுத்தப்படாத இத் தலைப்பு ஆங்கில மூலத்தில் "Indian Summer" எனும் தொடுப்பானது எனத் தெரிகிறது. அத் தொடுப்பு சுட்டும் கட்டுரை http://en.wikipedia.org/wiki/Indian_Summer . அதில் Indian Summer என தேலைத்தேயங்களில் குறிப்பிடப்படுவது இலையுதிர் அல்லது குளிர் காலங்களின் இடையில் அலங்கடையாக ஏற்படும் வெப்பமான சிறுகாலங்கள் என அறியலாம். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வெவ்வேறு மாதங்களில் அவ்வாறான கோடை ஏற்படினும் பெயரில் Indian என உள்ளடக்கப்பட்டது வட அமெரிக்காவின் செவ்விந்திய இனச் சூழலை குறிபிட்டே எனத் தெளிவாக அறியலாம்.

"Indian Summer" என்பதன் நேரடி மொழிபெயர்ப்பான "இந்திய கோடைகாலம்" ஆனதை "இந்தியாவில் உள்ள கோடைகாலம்" என தவறுதலாக புரிந்துகொள்ள இடமுள்ளது அல்லவா?

அவ்வாறு தவறான புரிதலை தவிர்ப்பதற்கு தலைப்பின் தமிழாக்கத்துக்கு மாற்று வழிகள் உண்டா?

--கா. சேது (பேச்சு) 05:12, 11 ஏப்ரல் 2012 (UTC)

இந்தத் தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சேது. இந்தக் கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் 50 வீதத்துக்கும் மேல் மனித மொழிபெயர்ப்பையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் திருத்தப்படாமல் தமிழ் விக்கியில் உள்ளன. உங்களுக்குத் தெரியும் தவறுகளை நீங்களே திருத்தியுதவலாம். கட்டுரையில் குறிப்பிட்ட மேலும் பார்க்க பகுதியில் உள்ள பட்டியலில் உள்ள கட்டுரைகள் எதுவும் தமிழ் விக்கியில் இல்லாததால், அப்பகுதியை நீக்கலாம். கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கில விக்கியில் உள்ள அனைத்தையும் ஒன்று விடாமல் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மேலும், Indian summer என்ற தலைப்பை செவ்விந்தியக் கோடைகாலம் என எழுதலாம் என்பது எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 08:33, 11 ஏப்ரல் 2012 (UTC)

Kanags சொல்வது சரியே. அவர்கள் ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுவது செவ்விந்தியக் கோடைக்காலமேயாகும். தமிழகப் பருவகால மரபை இதில் சேர்க்கவேண்டும். கார்,கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியவற்றையும் பருவகால்ம் சார்ந்த தமிழாண்டு காரில் தொடங்குவதையும் குறிப்பிடவேண்டும். (சான்று முதல் நிகண்டு, காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு, சோழர் தொடக்க காலம். இரண்டாம் நிகண்டு பத்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதில் வடமொழி மரபு, முதன்முதலில் நிகண்டில் சேர்க்கப்ப்பட்டுள்ளது.) உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:29, 14 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பருவ_காலம்&oldid=3807775" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பருவ காலம்" page.