பேச்சு:பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி

கல்லூரியின் இலத்தீனிய குறிக்கோளுரையின் தமிழாக்கம் சரியா?07:40, 19 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

  1. High School = உயர்நிலைப் பள்ளி (தமிழிகத்தில் +2 பள்ளிக்கல்வி வருவதற்கு முன், 11வருடங்கள். இப்ப வந்தபிறகு 10 வருடங்கள் ஆகும்.)
  2. higer secondary school = 10+2 என அமையும், தமிழகப் பள்ளிப் படிப்பாகும்.இப்படிப்புள்ளவை, மேல்நிலைப் பள்ளி என்றழைக்கப்படுகிறது.
    +2 என்பதனை சில மாநிலங்களில், junior college என்றழைப்பர்
  3. Intermediate = தமிழகத்தில் கல்லூரி முன்பருவப் படிப்பு என்ற முறை, இப்பொழுது இல்லை. முன்பு 11வருட உயர்நிலைப் பள்ளிப்படிப்பு+1வருட கல்லூரி முன்பருவப் படிப்பு (11+1) என இருந்தது.09:34, 19 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


தலைப்பு மாற்றம் தொகு

ஒரே பெயருடைய ஊர்கள் தென்இந்தியாவில் அதிகம் உள்ளன. ஆங்கிலத் தலைப்பின் படியே பெயரிடுதல் பொருந்தாது. தமிழகத்தில் பாலக்காடு என்ற கிராம்மும், ஆந்திராவின் நெல்லூரும் இங்கும் உண்டு. பாலக்கோடு என்ற ஊரும் தமிழகத்தில் உள்ளது. மலையாள விக்கிப்பீடியாவில் ஊரின் பெயரைச் சேர்க்காமல் தான் பெயர் வைத்துள்ளனர். இக்கட்டுரையை எழுதுவதற்கு முன், அக்கல்லூரி பாலக்காடு- என்ற ஊரில் இருப்பது எனக்குத் தெரியாது. மேலும், கல்லூரியின் பெயரை வைத்தே தேடுவர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விக்டோரியா அரசினர் கல்லூரி என்றே பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இங்கு கல்லூரியின் தற்போதையச் சட்டப்பூர்வமானப் பெயர் வைத்தலே சிறந்தது.மூலத்தைப் பெயரிடுமாறு, கேட்டுக் கொள்கிறேன். கேரள அரசு விக்டோரியா கல்லூரி என்று வைத்தாலும், தேடுபொறியில் தேடுபவர்களுக்கு வசதியா அமையும்.02:15, 20 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Return to "பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி" page.