பேச்சு:பீத்சா

பீத்சா என்னும் தலைப்பை மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இன்னும் மிக நெருக்கமான ஒலிப்பு பீட்ஃசா என்பது. இதனை ஒரு பதிவாக இங்கு குறித்து வைக்கவே இதனை எழுதுகிறேன்.
தமிழில் கஃசு என்று ஒரு சொல் உண்டு அதன் பொருள் காற்பலம் என்னும் எடை. அதாவது
நான்கு கஃசு = 1 பலம். இச்சொல் திருக்குறளிலும் ஆளப்பட்டுள்ளது.


தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
-திருக்குறள்

இதில் வரும் கஃசு என்னும் சொல்லை kuxsu அல்லது kahsu என்று ஒலித்தல் வேண்டும். எனவே வல்லிய ஒற்றெழுத்துகளுக்கு அடுத்து காற்றொலி சகரம் போன்ற ஒலி வர வேண்டும் எனில் மிக இயல்பாக ஃச எனப் பயன்படுத்தலாம். Oxford என்பதை ஆக்ஃசுபோர்டு (aaksbOrdu என்றும் தமிழில் ஒலிக்கும்) என்று எழுதலாம். ஆக்ஃசுவோர்டு (aaksvOrdu) என்றும் எழுதலாம். வ' = f என்னும் முறையைப் பின்பற்றினால். ஆக்ஃசுவோ'ர்டு எனலாம். ஆக்சுபோர்டு என்றாலும் எனக்கு ஏற்பே. என் குறிப்பு வல்லினம் அடுத்ட்து வரும் காற்ரொலி சகரத்தை மிக இயல்பாய் ஃச என எழுதலாம் என்பதைப் பற்றியதே.--செல்வா 15:33, 10 ஜூன் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பீத்சா&oldid=535483" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பீத்சா" page.