பேச்சு:புகழூர் (காகித ஆலை)

புகழுர் (காகித ஆலை) என்பதே சரியான பதிவு, அதாவது புகழுரில் காகித ஆலை உள்ளது. காகித ஆலை 1983 நிறுவ பட்டது ஆனால் புகழூர் சங்ககாலம் தொட்டு தொடரும் பாரம்பர்யம்.

புகழுர்: புஞ்சை, நஞ்சை, காகிதபுரம் என்ற பேருரட்சிகளை உள்ளடக்கியது.

புகழி மலை புகழுர் பெயர்காரணம், சங்க இலக்கியங்கள், புலவர்களால் பாடல் பெற்ற முருகன் கோவில் உள்ளது.

இந்தியாவின் நீலமான தேசிய நெடுஞ்சாலை மற்றும் இருப்பு பாதை வசதி பெற்றுள்ளது.

கரூர் மாவட்ட எல்லையான புகழுர், காவேரி ஆற்றின் கரையில் உள்ளது, ஆற்றங்கரை கிராமம் என்றாலே நீண்ட பாரம்பர்யம் கொண்டதாக தான் இருக்கும்.

காகிதபுரம் தொழில் சாலை வருகைக்கு பிறகு, சுற்றுசுழல் மாசுபாட்டால் இயற்கை வளம் குறைந்து, விலை உயர்வு, கலாச்சாரம் போன்றவை பெரிதும் மாற்றம் கண்டுள்ளது, இருந்த பொழுதும் அந்த தொழில் சாலை உள்ளூர் வெளியூர் என்று பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

காகிதபுரம் தொழில் சாலை காகிதம் தயாரிப்பில் உள்ளது அதன் துணை நிறுவனமாக சிமன்ட் தயாரிப்பில் இரங்கி உள்ளது.

காவேரி ஆறு அகண்டு காணப்படும் தலை இடம், இங்கிருந்து திருச்சி வரை அகண்ட காவேரிதான் ஆனால் நீர் இல்லை, இப்போது மணலும் இல்லாமல் செய்ய அரசு தரப்பு இரங்கி உள்ளது.

புஞ்சை புகழூர் பேரூராட்சி விவசாயம்(கரும்பு, வாழை, வெற்றிலை, நெல், தென்னை), தொழில் சாலை, ஏற்றுமதி போன்ற அனைத்தும் கொண்ட சிறப்பு பேரூராட்சி.

இங்கு புகழ் பெற்ற தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என்று வர்த்தக பயன்பாட்டு மற்றும் விவசாய உதவி பெற வங்கிகள் செயல் படுகின்றன.

வரலாற்று சிறப்பு மிக்க அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளது.

மத நல்லிணக்கம் கொண்ட இங்கு கோவில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உண்டு.

அரசியல் சுய லாபம் பார்ப்பதால் பல வகைகளில் புகழூர் வளர்ச்சி மற்றும் பெருமை மறைக்கப்பட்டுள்ளது. உதாரணம் தனி தாலுக்கா, மாவட்டதின் முக்கிய நகரம் என்ற பெருமைகள் மறைக்கப்பட்டு மேலும் மறைக்க படுகின்றன.


புகழூர் நிகழ்காலம் செந்தில்குமார் சு

Start a discussion about புகழூர் (காகித ஆலை)

Start a discussion
Return to "புகழூர் (காகித ஆலை)" page.