பேச்சு:பெருமூளை

@5anan27: வேங்கைத் திட்டத்தில் கலந்து கொண்டு அறிவியல் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்கு மிக்க நன்றி. இக்கட்டுரைகளில் பயன்படுத்தியுள்ள சொற்கள் இலங்கையில் புழக்கத்தில் உள்ளனவா? குறிப்பிட்ட பாடநூல்கள், கலைச்சொல் அகரமுதலிகளில் இடம்பெற்றுள்ளனவா? ஏற்கனவே நீங்கள் ஆலமரத்தடியில் இட்டிருந்த கருத்துகளைக் கவனித்தேன். எனவே, ஆர்வத்தின் அடிப்படையிலேயே இக்கேள்விகளைக் கேட்கிறேன். விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு விக்சனரியில் உள்ள சொற்களையும் பெரிதும் பயன்படுத்துவதுண்டு. --இரவி (பேச்சு) 11:21, 27 மார்ச் 2018 (UTC)


வணக்கம் இரவி, மிக்க நன்றி. மூளையம்(cerebrum), மூளி (cerebellum), மேற்பட்டை (cortex) உள்ளிட்டவை இலங்கைப் பாடத்திட்டத்தில் பயன்படும் கலைச்சொற்கள் தான் (இங்கு 8ஆம் பக்கத்தைப் பாருங்கள்.) தமிழ்வு கலைச்சொல்லகராதியை ஆராய்ந்து அவற்றுக்கான தமிழகக் கலைச்சொற்கள் முறையே பெருமூளை, சிறுமூளை, புறணி என்று அறிந்துகொண்டேன். எனினும் தமிழ் விக்சனரியிலும், த.இ.க.க.இலும், இலங்கையிலும் கூட சில ஆங்கிலப்பதங்களுக்கான சொற்களைப் பெற முடியவில்லை. அத்தகையவற்றுக்கென புதிதாக உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள், தொலைமிதடு (telencephalon),அணியமிதடு (prosencephalon), சுற்றுமிதடு (mesencephalon) போன்றவை. (மிதடு = மூளை, cephalonஇற்குப் பயன்படுத்தினேன்). ஆனால் புதுக்கலைச்சொல்லை உருவாக்குவதில் எனக்கு அச்சம் உண்டு. முன்பு தூதாறனை, காவாறனை தொடர்பான உரையாடல்களில் நீங்களும் அதைக் கண்டிருக்கலாம். உருவாக்கிய கட்டுரையை வேறொரு மனநிலையில் படித்துப்பார்த்தபோது தான் அறிவியல் கட்டுரைகளின் பொதுவான இலக்கிடல் புள்ளிகளான (target points) மாணவர்கள் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது புரிந்தது. அதன் விளைவே ஆலமரத்தடியில் கேட்ட வினா. தங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். --அஞ்சனன்.வி (பேச்சு) 18:23, 27 மார்ச் 2018 (UTC)
வணக்கம் இரவி! telencephalon-கடைமூளை, mesencephalon- இடைமூளை, prosencephalon-அண்மூளை, cerebrum-பெருமூளை, cerebellum-சிறுமூளை, cortex-புறணி என்பன தமிழக வழக்கு ஆகும். இவற்றை இக்கட்டுரையில் தகுந்த சூழலில் உடன் இணைப்பது வாசகத் தளத்தைப் பரவலாக்கும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:29, 13 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருமூளை&oldid=2509498" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெருமூளை" page.