பேச்சு:பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்

யார் இந்த திருமாவளவன்? விக்கிபீடியாவின் சோழமன்னர்கள் வரிசையில் இந்தப் பெயர் இல்லை. இந்த ஹைபர்லின்க்கை சொடுக்கினால் இப்போதைய அரசியல் பிரமுகர் திருமாவளவனின் பக்கத்தை காண்பிக்கிறது. தயவு செய்து இது போன்று தவறுகளைச் செய்யாதீர்கள். என்னைப் போன்று பலர் விக்கிபீடியாவை ஆதாரமாக பயன்படுத்துகிறோம்.--−முன்நிற்கும் கருத்து 122.164.233.84 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கரிகால் சோழனையே திருமால்வளவன் என்றும் சொல்வார்கள். கட்டுரையில் திருத்தம் செய்திருக்கிறேன். தவறைச் தெரிவித்த அன்பருக்கு நன்றிகள்.--Kanags \பேச்சு 07:39, 27 ஜனவரி 2009 (UTC)

திருமால்வளவனே பின்பு கரிகால் சோழனென்றும், கரிகாலன் என்றும், கரிகால் பெருவளத்தான் என்றும் அழைக்கப்பட்டார்! மாளிகை எரிந்த நெருப்பில், ஒரு கால் சற்று வெந்திட, அவ்வாறு பெயர் ஏற்பட்டது! மிகவும் சிறு வயதிலேயே போர்த்திறம் காட்டி வென்ற வீரர்! இப்பெயர்க்காரணத்தால், இவரே முதல் கரிகால் சோழனென்பது மிகத் திண்ணமாய் விளங்குகிறது! "அகவை முன்நின்று களங்கண்ட பெருவழுதி" என்பது சிறப்புப் பெயர்! வரலாற்றுப் புத்தகங்களை சற்றுப் பொறுமையுடன் நோக்கவும்!

Start a discussion about பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்

Start a discussion
Return to "பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சியவன்" page.